Posts

Showing posts from February, 2026

கலித்தொகைப் பாடல்கள்.... 14

    ரசனைக் குறிப்புகள்   14 தாம் சொல்லிய பொய்யன்றி புகுதந்தார்   பாய்ந்து வரும் ஆற்றுநீர் கால்வாய்களில் ஓடி வறண்டிருந்த இடங்களை அழகுபெற வைத்திருக்கிறது. குளங்களுக்கு நீரடித்துப் பாய்ந்த அயலிலே வரிவரியாய் நுண்மணல் திரண்டிருக்கிறது. அதை மூடி உதிர்ந்து கிடக்கின்றன ஈங்கை மரப் பூக்கள். காதலர்ப் பிரிந்தவர் நெற்றி நிறத்தில் பீர்க்குகளும் பூத்துவிட்டன. புணர்ந்தவர் முகம்போல பொலிந்திருக்கின்றன பொய்கையில் பூக்கள். உடம்பை நடுக்கும் பனியோடு வாடையும் சேர்ந்து என்னைக் கலங்கச் செய்கின்றது. அன்றொரு நாள் புணர்ச்சிவேளையின் உச்சத்தில் பிரியேனென்று ஒரு வார்த்தை சொன்னார். நாடு வென்று   வெல்புகழ் வீரராய் யானைமேல் ஏறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெல்லாம் என்னை உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?   தன் நிறை கதிர்களை வீசி நிலா எறிக்கிறது. வாடைக்காற்றும் குளிரோடு சேர்ந்து கடுகி வீசுகிறது. படை வென்று வெற்றி வீரராய்       குதிரையேறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெ...

கலித்தொகைப் பாடல்கள்... 13

    கலித்தொகைப் பாடல்கள்: ரசனைக் குறிப்புகள் 13   (கலித்தொகைப் பாடல்கள் பேசும் பெரும்பாலான பிரிவானது பொருள்வயிற் பிரிவாகவே இருக்கிறது. சிலவே போர்வயிற் பிரிவைப் பேசுகின்றன. அவற்றுள் இது ஒன்று.) பலதேவனைப்போல் வெண்ணிறப் பூக்கள் குலுங்கித் துலங்கும் அரசமரம்; சூரியனைப்போல் விரிந்த பூக்களால் ஔி விரிக்கும் செருந்தி; காமனைப்போல் வண்டார்க்கும் பூக்களைக் கொண்ட காஞ்சி; அவன் தம்பி சோமன்போல் பூக் குலுங்கும் ஞாழல்; சிவன்போல் நிறை பூப் பூக்கம் இலவம்; இவையெல்லாமே நதிதீரத்து எழில் மரச் சோலையில் பூத்துப் பொலிந்துவிட்டன. இளவேனில் பிறந்துவிட்டது!   திசையெங்கும் பறந்து தேன்மாந்தி இன்புறும் வரிகொண்ட தும்பிகள் மலிந்த நாட்டில், அலைந்துழன்று அபலைகளாய் வருவோரைப் புரந்து வெற்றியின் புகழோடு வதிந்துகொண்டிருக்கும் தலைவரா, சிறந்த என் அழகெலாம் இங்கே வாடிக்கொண்டிருப்பதை நினக்கப்போகிறார்?   புகலடைய ஏற்ற இடமென்று தாமாகவே வந்து தஞ்சமாகியவரை தளராது தாங்கி அதனால் உலகு புகழ்கொண்டோராய் அந்நிய நாட்டில் உறையு...