Posts

Showing posts from September, 2016

யதார்த்தங்களின் சிறை - எஸ்.வாசன்

(கனவுச் சிறை நாவல் பற்றி, 10 அக்டோபர் 2015 லண்டனில் நடைபெற்ற விம்பத்தின் 3 நாவல்கள் அறிமுக உரையாடல் அமர்வில் திரு எஸ்.வாசன் வாசித்த கட்டுரை.) ஈழ புகலிட புனைகதை இலக்கியமானது இன்று சிக்கல்களும் சவால்களும் நிறைந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பலத்த வீச்சுடனும் செறிவுடனும் நடைபயின்ற இப் புனைகதை மரபானது இன்று தன் அடையாளத்தையும் தனித்துவத்தையும் இழந்து தடுமாற்றத்துடன் பயணிக்கும் அதேவேளை, மக்கள் விரோத அரசியலிலிருந்து உருவாகிய மலிவான கழிசடை இலக்கியங்கள் அதிக அங்கீகாரங்களை பெறுவதும் அதிகரித்து வருகின்றது. இதற்கும் அப்பால் போரும் அது தந்த நெருக்கடிகளும் அதிகரித்திருந்த வேளையில், மரணங்கள் மலிந்திருந்த ஒரு பூமியிலிருந்து மரணத்துள் வாழ்வோம் என முழக்கமிட்ட படைப்பாளிகள் நிறைந்த சமூகத்திலிருந்து ஒரு சிறிய முப்பது வருட இடைவெளியின் பின் படைப்புக்கள் யாவும் ‘துன்பங்களை பாடுதல்’ என்ற வரையறைக்குள் சட்டகப்படுத்தப்பட்டு வெளிவருவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. காலமும் சூழலும் எமக்கு உவப்பில்லாத இந்த யதார்த்தமான சூழ்நிலையில் தேவகாந்தனின் ‘கனவுச் சிறை