Posts

Showing posts from 2018

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 8

( இதுபோன்ற மாயநிலைக் கதைகள் ஈழ தமிழிலக்கியத்தில் நிறைய இல்லை. இத்தகைய பின்நவீனத்துவ சாயலுடன் சிறுகதைகள் மொத்த தமிழ்ப்பரப்பிலும்கூட பெருவாரியாக இல்லையென்றே சொல்லவேண்டும். ச.ராகவன், திசேரா போன்றவர்கள் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். இப்போது ந.மயூரரூபனின் எழுத்துக்களில் இம்மாயாவாதத் தன்மைகளை அதிகமும் நான் கண்டுவருகிறேன். இத்தகைய கதைகள் சொற்களில் தங்கிநிற்பவை. தமக்கேற்ற சொல் இல்லையேல் நேர்த்தி நாகம்போல் இவற்றிலிருந்து நழுவிப் போய்விடுவதாய் இருக்கின்றது. ஓட்டமாவடி அறபாத்தின் இந்தக் கதை மிக நன்றாக வந்து அமைந்திருக்கிறது. 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி' என்கிற இவரது கதைத் தொகுப்பில் இதைவிட சிறந்ததாய் இரண்டொரு கதைகள் இருந்திருந்தாலும், இவ்வகைக் கதைக்காகவே இது என் தேர்வாகிறது.) ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன -ஓட்டமாவடி அறபாத்- இரவு விளக்கின் அனுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது.       கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணித்தன. கதவின் தாழ்ப்பாள் விலகிற்று. நான் சைக்கிளை உலத்திக்கொண்டு வெளியே வந்தேன்

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

Image
2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த 'நட்ராஜ் மகராஜ்' தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது.       முதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே  இருந்தது.       என்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்தும் நான் நண்பர்களுடன் உரையாடாமலோ எழுத்தில் பதி

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 7

 (தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் கடித நடையின் ஆகக்கூடிய சாத்தியங்களைக்கொண்ட புனைவிலக்கிய வகையைச் சார்ந்தவை.  முப்பத்தேழு கதைகளை உள்ளடக்கிய அவரது அண்மைக்காலத் தொகுப்பான 'வன்னியாச்சி' என்ற தொகுப்பில் இக்கதை உள்ளது.) பாதை தாமரைச்செல்வி திட்டம் போட்டபடி எல்லா ஒழுங்கும் செய்தாகிவிட்டது.       மணவறை தகரப்பந்தலுக்கு முற்பணம் கொடுத்துவிட்டாள். நூறு நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தாயிற்று. சமையலுக்கும் இரண்டு பேருக்குச் சொல்லிவைத்தாயிற்று. பொன்னுத்துரை கிழவனிடம் ஒரு வண்டில் விறகு ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஏதாவது மிச்சமாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள்.       பலகாலத்துக்கும் சமையலுக்கும்தான் இனிச் சாமான்கள் வாங்கவேண்டும். அதற்கும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். ஏதாவது நாலுவகைப் பலகாரம் போதும். ஒரு நூறுபேர் வரைதான் கல்யாணத்திற்கு வருவார்கள். மற்றும்படி சொந்தக்காரர்கள் எல்லோரும் ஆளுக்ககொரு திசையில் சிதறிப்போய்விட்டார்கள். அவர்களை எல்லாம் தேடிப் போய்ச் சொல்ல அவகாசம் இல்லை.       இந்த நெருக்கடியான நேரத்தில் ஆடம்பரமாகக் கல்யாணம் செய்வது அநியாயமாய்த் தோன்றியத

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 6

ந.மயூரரூபனின் எழுத்துக்கள் சிக்கலும் தெளிவும் உடைய இரண்டு வகையினத்துள் அடைபடக் கூடியவை. அவரது பிற்கால புனைவுகளில் எழுத்தை அதன் ஆகக்கூடிய அர்த்தம் கொள்ளுமளவு இறுக்கிச்செல்லும் ஒரு முறைமையினை நான் அவதானித்தேன். இதுபோன்ற எழுத்துக்கள் நம்மிடையே எழுத பலரில்லை இன்று. இதனாலேயே இவரது வேறு நல்ல கதைகள் இத்தொகுப்பிலுள்ளபோதும், இதை இத்தொகுப்பின் சிறந்த கதையாகப் பதிவிடுகிறேன். என்னைப்பற்றிய பிற்குறிப்பு ந.மயூரரூபன் இதமான எண்ணங்களின் அரவணைப்பில் சுருண்டிருந்தது மனது. உடலது உணர்வுத் துளிகளில் ஒருவிதமான இன்பத் தேறல் துளிகளாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது. எனது ஒவ்வொரு அசைவும் மோகத்தின் மயக்கந்தரும் மகரந்தத்தின் வாசனையின் ஆக்கிரமிப்பினை ஆவலுடன்  எதிர்பார்த்து துடித்துக்கொண்டிருந்தது. அவளின் அன்பு பொலியும் அழகுமுகம் என்னருகே என்னையே பார்த்தபடி…       நான் உணர்வுகளில் சரணடைந்து என்னிலை மறந்து அவள் முகத்தினை நெருங்கினேன்.       ஒளிச் சிதறலுடன் வெடித்துச் சிதறியது காற்று.       என் கண்கள் இருளையே கண்டன. ஒளியைப் பார்க்க முனையும்போது சிதறிய உயிரின் துகள்களில் என் முகங்களே பலவாய்த் தெரிந்தன.

நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்

(சென்ற ஆண்டு (2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. நடையிலும் கருத்திலும் பெரிதான மாற்றமெதையும் நான் இதில் செய்துவிடவில்லை. தகவல்கள் சற்று கூடியிருக்கின்றன.) 'நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களில் தனிமனித அறம்' என்ற தலைப்பில் நான் பேசவிருந்தாலும் அவரது நாவல்களை முன்வைத்தே என் கருத்துக்களை பதிவாக்க விரும்புகிறேன். இதற்கு தமிழ் நாவலின் தோற்றத்தையும், அது எவ்வாறு ஒரு இரட்டைத் தடத்தில் ஆரம்பம் முதல்  வளர்ந்து வந்ததென்பதையும் காணவேண்டி இருக்கிறது. 1879இல் வேதநாயகம்பிள்ளை எழுதிய 'பிரதாபமுதலியார் சரித்திரம்', 1896இல் வெளிவந்த ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம்' இரண்டையும், இவற்றிற்கிடையே பதினேழாண்டுக் கால இடைவெளி இருக்கிறபோதும், இரட்டைத் தட ஆரம்பத்தின் உதாரணமாகக் கொள்ளலாமென நம்புகிறேன். வேதநாயகம்பிள்ளையின் நாவல் டொன் குவிசோட்டை அடியாகக்கொண்ட வீரப்பிரதாப, அற விழுமியங்களை உள்ளடக்கிய கதை கூறல் கலையை முதன்மைப்படுத்தியது எனவும், ராஜமையரின் எழுத்து கலையை