Posts

Showing posts from 2019

கதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல் - த.அகிலன்

Image
பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம் அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம் அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும் , தெரியாத சூழலில் , புதிய நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம்.   பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின் பேரன்பை நாம் தரிசிக்கக் காரணமாயிருக்கிறது. எல்லைகளின் விரிவென்பது நமக்களிக்கும் கிளர்ச்சியும் , தீர்ந்துவிடாமல் நம் முன்னே நீண்டு செல்லும் பாதைகள் நமக்களிக்கும் மகிழ்வும் , அதனுள் பொதிந்திருக்கும் சாகசவுணர்வும்தான் பயணம் பற்றிய உயர்வு நவில்தல்களின் பிரதான காரணியாக இருக்கிறது. ஆனால் பயணத்தை தொழிலாகக் கொள்வது இவற்றினின்றும் வேறுபட்டது. சேருமிடங்களை உறுதியாக அறிந்த திரும்புதலின் நிச்சயத்தோடு நிகழ்த்தப்படும் பயணங்களுக்கும் திரும்புதலில் நிச்சயமின்மையோடு நிகழும் பயணங்களுக்குமான வேறுபாடு அளப்பரியது. முன்னையதில் பெருமகிழ்வும் குறைந்த அனுபவங்க

பெண்களும் மனச்சிதைவும்

தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலில் பெண்களும் மனச்சிதைவும் -மைதிலி தயாநிதி – பெண், மனச்சிதைவு, ஆணாதிக்க சமூகம் எனுமிம் மூன்றுக்குமிடையிலான சிக்கலான தொடர்பினை காலச்சுவடு பதிப்பக வெளியீடான தேவகாந்தனின் கந்தில் பாவை (2016) சித்திரிக்கின்றது. நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் கதையினை, நான்கு பாகங்களில், 263 பக்கங்களில் பின்னோக்கி நகர்ந்து செல்லும் காலவொழுங்கு அடிப்படையில்   (2015 – 1880) நாவல் விரித்துச் செல்கின்றது. பாத்திரங்ககளின் மனச்சிதைவிற்கான மூல காரணத்தைத் தேடுவதால், கூறும் விடயத்திற்கேற்ப, நாவலின் கால ஒழுங்கமைவும் பின்னோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. அதாவது, நிகழ்காலத்தில் கடந்த கால நினைவுகளை மீட்டெழுப்பும் flash-back   உத்திக்குப் பதிலாகக் கதையின் நான்கு பாகங்களும் பின்னோக்கிய கால ஒழுங்கடிப்படையில்   (reverse chronological order) அமைந்துள்ளன.             எந்த ஆணாதிக்க கலாசாரத்திலம், அதன் உள்ளார்ந்த நம்பிக்கைகளுடன் வளர்தல் என்பது பெண்கள் மனநலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஷானா ஒல்வ்மன் கூறுகின்றார். அவ்வகையில், பெண்களின் மனச் சிதைவிற்கு பரம்பரை மட்டுமன்

துக்கத்தின் வடிவம்

துக்கத்தின் வடிவம் எனினும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கோ ஓர் மூலையில் வாழ்வு குறித்து . கொஞ்சம் அமைதிக்கும் கொஞ்சம் நிம்மதிக்கும் கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும் ஆசைகளின் பெருந்தவிப்பு . ஆனாலும் மீறி எழுகிறது மனவெளியில் பய நிழல்களின் கருமூட்டம் . முந்திய காலங்களில் மரணம் புதைந்திருந்த குழிகள் எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது . ஆனால் இப்போது ...? அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமுமே பயங்கரம் விளைக்கின்றன . எங்கே வெடித்துச் சிதறும் எங்கே அவலம் குலைந்தெழும் என்று தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது . மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல் மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது . இப்போதெல்லாம் தூக்கம் அறுந்த இரவுகளும் ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே காலத்தின் நகர்கிறது . அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமும

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 9

(சில வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீதரனின் ‘ஸ்ரீதரன் கதைகள்’ தொகுப்பை வாசித்ததிலிருந்து ‘சொர்க்கம்’ கதை நெஞ்சில் நின்றிருந்தது. சிறுகதையின் அமைப்பு கச்சிதமாய் அமைந்த கதையென்பதே அப்போது என் அபிப்பிராயமாக இருந்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள் பகுதிக்கு இதை எடுத்துக்கொண்டு ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இது சிறுகதை வடிவத்தையும் மீறி ஒரு குறுநாவலளவாய் வந்திருப்பதை உணர்ந்தேன். மேலே பதிவிற்காக தட்டச்சு செய்தபோதுதான் இது அந்தளவு விஸ்தீரணத்தையோ உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லையென்பது உணர்கையாகியது. இதை கூடியபட்சமாக ஒரு நெடுங்கதையாகவே எடுக்க இப்போது முடிந்திருக்கிறது. சிறுகதையின் விரிந்த வடிவமே நெடுங்கதையெனின் இந்த அலகுக்குள் இதனை அடக்குவதுதான் சரியாகவிருக்கும்.) சொர்க்கம் - ஸ்ரீதரன் - எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப்படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய புனிதத்திரித்துவம் நமது கவனம். எசக்கியும் செவுத்தியும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்பு வாகனமேறிய பெம்மான்கள். கரீம் ஒரு ஜாதி ஆள். இரவல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக்கிற நேரம் விறகு தள்ளுவான் அல்லது இளநீர் விற்ப