Posts

Showing posts from July, 2021

விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி

  விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி - ந. இரவீந்திரன். “ஜீவந தி” இன் ஈழத்து நாவலிலக்கியச் சிறப்பிதழுக்கு ஒரு படைப்பாளியின் புதிய மிலேனியத்துக்கான படைப்புகளைப் பேசுபொருளாக்க வேண்டும் என்ற பொழுது எந்தத் தயக்கமுமின்றித் தெரிவு செயதாக வேண்டிய படைப்பாளியாக முற்பட்டு நின்றவர் தேவகாந்தன். அவரது படைப்புகளது விரிந்த தளங்களும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான வீச்சான அவருடைய கருத்தியல் புலமும் கள அனுபவங்களை உள்வாங்கி வடிவப்படுத்திய பாங்கும் எனப் பல காரணங்களால் இந்தத் தெரிவு அவசியப்பட்டது. அதனை ஒரு கட்டுரைக்குள் அடக்குவது என்பது மிகுந்த சிரமத்துக்கு உரியது. ஒரு தனி நூலுக்கு உரிய களம் அது. விரித்துப் பேச அவசியப்படுகிற விடயப்பொருளுக்கான முன்னுரைக் குறிப்பாக இக்கட்டுரை அமைகிறது. இங்கு கவனங்கொள்ள வேண்டியுள்ள காலப் பரப்புக்கான தேவகாந்தனின் நாவல்கள் (ஜூலை 2019 இல் காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘கலாபன்’ நாவலில் இடம் பெற்ற ஒழுங்குப் பிரகாரம்): 1. லங்காபுரம், 2. கதாகாலம் (மகாபாரத த்தின் மறுவாசிப்பு), 3. யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 4. நிலாச் சமுத்திரம், 5. கனவுச் சிறை, 6. கந்தில் பாவை, 7. கலிங்கு, 8. ந திம