Posts

Showing posts from November, 2020

'கனவுச்சிறை" நாவல், மதிப்பீடு: நொயல் நடேசன்

  கனவுச்சிறை - தேவகாந்தன் Posted on   18/05/2016 by  noelnadesan இலக்கிய காலங்கள் , அந்தக்காலத்தின் சூழல் , சமூகம் , பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது . அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள் , மாதங்களாக இருக்கத் தேவையில்லை . இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939 ல போலந்திற்கும் 1941 ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது . ஆச்சரியமாக இருக்கிறதா ? மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக் , ரியலிசம் , நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது . அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும் . ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை . தற்பொழுது நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைப் பார்ப்போம் . ஈழத்தமிழ் இலக்கியத்தில் எனக்கு தெரிந்த காலம் 60-80 வரை முற்போக்கு காலம் . அக்காலத்தில் புரட்சி , சாதியம் என்பன பேசப்பட்டது . இரண்டு பிரிவுகளாக சிவப்பிலக்கியம் பேசியவர் ஒருவரை ஒருவர் திரிபுவாதிகள் என எழுதியதை சஞ்சிகைளில் வாசித்தேன் . சோவியத்தின்