Posts

Showing posts with the label எனக்குப் பிடித்த சிறுகதைகள்:

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 9

(சில வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீதரனின் ‘ஸ்ரீதரன் கதைகள்’ தொகுப்பை வாசித்ததிலிருந்து ‘சொர்க்கம்’ கதை நெஞ்சில் நின்றிருந்தது. சிறுகதையின் அமைப்பு கச்சிதமாய் அமைந்த கதையென்பதே அப்போது என் அபிப்பிராயமாக இருந்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள் பகுதிக்கு இதை எடுத்துக்கொண்டு ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இது சிறுகதை வடிவத்தையும் மீறி ஒரு குறுநாவலளவாய் வந்திருப்பதை உணர்ந்தேன். மேலே பதிவிற்காக தட்டச்சு செய்தபோதுதான் இது அந்தளவு விஸ்தீரணத்தையோ உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லையென்பது உணர்கையாகியது. இதை கூடியபட்சமாக ஒரு நெடுங்கதையாகவே எடுக்க இப்போது முடிந்திருக்கிறது. சிறுகதையின் விரிந்த வடிவமே நெடுங்கதையெனின் இந்த அலகுக்குள் இதனை அடக்குவதுதான் சரியாகவிருக்கும்.) சொர்க்கம் - ஸ்ரீதரன் - எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப்படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய புனிதத்திரித்துவம் நமது கவனம். எசக்கியும் செவுத்தியும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்பு வாகனமேறிய பெம்மான்கள். கரீம் ஒரு ஜாதி ஆள். இரவல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக்கிற நேரம் விறகு தள்ளுவான் அல்லது இளநீர் விற்ப...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 7

 (தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் கடித நடையின் ஆகக்கூடிய சாத்தியங்களைக்கொண்ட புனைவிலக்கிய வகையைச் சார்ந்தவை.  முப்பத்தேழு கதைகளை உள்ளடக்கிய அவரது அண்மைக்காலத் தொகுப்பான 'வன்னியாச்சி' என்ற தொகுப்பில் இக்கதை உள்ளது.) பாதை தாமரைச்செல்வி திட்டம் போட்டபடி எல்லா ஒழுங்கும் செய்தாகிவிட்டது.       மணவறை தகரப்பந்தலுக்கு முற்பணம் கொடுத்துவிட்டாள். நூறு நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தாயிற்று. சமையலுக்கும் இரண்டு பேருக்குச் சொல்லிவைத்தாயிற்று. பொன்னுத்துரை கிழவனிடம் ஒரு வண்டில் விறகு ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஏதாவது மிச்சமாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள்.       பலகாலத்துக்கும் சமையலுக்கும்தான் இனிச் சாமான்கள் வாங்கவேண்டும். அதற்கும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். ஏதாவது நாலுவகைப் பலகாரம் போதும். ஒரு நூறுபேர் வரைதான் கல்யாணத்திற்கு வருவார்கள். மற்றும்படி சொந்தக்காரர்கள் எல்லோரும் ஆளுக்ககொரு திசையில் சிதறிப்போய்விட்டார்கள். அவர்களை எல்லாம் தேடிப் போய்ச் சொல்ல அவகாசம் இல்லை.       இந...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 5

(அண்மையில்தான் ந.வினோதரனின் 'தவிச்ச முயல்' சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு பொலிஸ் விசாரணையின் கேள்வி பதில்கள் ஒரு கதையாக விரிந்த சிறப்பு எப்போதும் மனத்திலிருந்துகொண்டிருந்தது. இந்தவகையான உத்தி மிகவும் பழையதென்றாலும், மிக நுட்பமான கேள்வி-பதிலை அமைத்ததின்மூலம் ஒரு கதையே பின்னணியில் ஓடிக்கொண்டிருக்குமளவிற்கு அற்புதமாயமைந்திருக்கிறது கதை.) வேதாளத்திற்கு அளித்த வாக்குமூலம் ந.வினோதரன் “பெயரென்ன?” “அன்பழகன்.” “முழுப்பெயரைச் சொல்லு.” “அண்ணாமலை அன்பழகன்.” “ஊரு?” “யாழ்ப்பாணம்.” “யாழ்ப்பாணம் எங்கு?” “சாவகச்சேரி.” “சாவகச்சேரி அற்றஸ் சொல்லு.” நாச்சிமார் கோயில் வீதி, கல்வயல், சாவகச்சேரி.” “டேற் ஆவ் பேர்த்?” “22-09-1984.” “வயசு?” “இருபத்தஞ்சு.” “ஐ.சி.நம்பர்?” “841363140.” “பிறந்தது?” “பளை ஆஸ்பத்திரி.” “யவ்னாவில கொஸ்பிடல் இல்லையா?” “சாவகச்சேரியிலும் இருக்குது. ஆனால் அம்மம்மா வீடு பக்கத்தில எண்டதாலயாம்.” “அப்பாட முழுப் பெயர்?” “வல்லிபுரநாதர், கதிர்காமர், அண்ணாமலை.” “அப்பா என்ன வேலை?” “ஊரில வயல் இருந்தது. இப்ப வேலையில்லை.” “எத்தனை ...