Posts

Showing posts from 2010

தலையங்கம்: தேவகாந்தன்

கூர் தலையங்கம்: தேவகாந்தன் ‘அழிவின் கதறலையும் நெஞ்சில் நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நான் உங்களிடம் வருகிறேன்…’  ஏர்னஸ்ரோ சே குவேரா 1 புகுந்த ஒரு நாட்டின் மொழியினுள்ளும், பண்பாட்டினுள்ளும் ஓரினம் தன்னை விரும்பியே ஒப்புக்கொடுப்பதில்லை. காலவோட்டத்தில் மெல்ல மெல்லவாய் அது தானே நிகழ்கிறது. எனினும் அதன் வேரடியாக அதன் அசலான இனத்துவசு; கூறுகள் மெதுவான மாற்றங்களோடும் தம்மைத் தக்கவைத்துக்கொண்டு புதிய பரிமாணத்துக்காகக் காத்துநிற்கவே செய்யும். நாளைய புலம்பெயர் இலக்கியத்தின் வெளிப்பாடு கனடாவை, இங்கிலாந்தை, அவுஸ்திரேலியாவை, அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த மொழியினூடாக நிகழப்போகிறது என்பதில் ஐயப்பாடுகளுக்கு இடமில்லை. அது ஆங்கிலத்தின் வழியாகவேதான் இருக்கப்போகிறது. ஆனாலும் நாளைய தலைமுறையின் படைப்பு மொழியில் இந்த இனம்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு நிச்சயமாக இருக்கவே செய்யும். அவர் தம் சிந்தனையின் அசலான திசை அதனடியாகவேதான் அமையும். அதன் காரணமாய், அப் படைப்பு கனடா ஆங்கில இலக்கியமாக அடையாளப்படும் நேரத்திலும், அவர் தம் வேரடி சார்ந்த வெளிப்பாடுகளின் அம்சங்களைக் குறிக்கும் வண்ணம் கீழ்த்திசைக