Posts

Showing posts from 2015

யாருடன் உரையாடி மனமாறல்கூடும்?

Image
எப்படியெல்லாம் தொடர்ந்தேர்ச்சியாக இது நடக்கிறது? வாழ்வின் மீதான தன் அதிகாரத்தை காலதேவன் இப்படித்தான் நிலைநிறுத்துகின்றானா? நேற்றுப்போல் இருக்கிறது, கவிஞர் திருமாவளவனின் மறைவு. இப்போது… வெ.சா! தாங்குவது சிரமமாகவே இருக்கிறது. வாழ்க்கையை… கழியும் நாட்களை… அவற்றின் கழியும் விதங்களை எண்ண மனது அவாவி நிலைநிற்க மறுத்துச் சலிக்கிறது. 2003இல் நான் தமிழகத்தைவிட்டு இலங்கை புறப்படும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் வெ.சா.வுக்கும் நிறைந்த தொடர்பு இருந்தது. அப்போது அவரது வீட் டுக்கு அண்மையில் மடிப்பாக்கத்தில்தான் நானும் குடியிருந்தேன். கூட்டங்களுக்கு கூடிச் செல்வதிலிருந்து ஓய்வுநேரங்களில் சந்தித்து உரையாற்றுவதுவரை வாரம் தவறாமல் நாங்கள் ஒரு தொடர்பில் இருந்திருந்தோம். நான் இலங்கையிலிருந்து கனடா சென்ற பிறகும் எங்கள் தொடர்பு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் இருந்துகொண்டேயிருந்தது. இறுதியாக முகநூலிலும்.  மடிப்பாக்கத்தில் இருந்த இறுதி நாட்களில் அவரது மனைவியின் பிரிவு அவரை வெகுவாக வாட்டியிருப்பினும், பெங்களூரு சென்றபிறகு அவர் திடமாகவே இருந்ததாகத்தான் தெரிந்தது. 2013

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 3

எனக்குப் பிடித்த சிறுகதைகள்:   3 (இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்) மழை ஏன் வந்தது? -நிரூபா ஒரு சின்ன அட்டைபோலத்தான் இருந்தது. சிறிது சிறிதாய் வளர்ந்து பெரிய ஒரு உருவமாய் மாறியது. பாம்பு! பெரிய ஒரு பாம்பு. மெதுவாய் அசைந்து அவளுக்குக் கிட்ட வந்தது. தலையை உயர்த்தி விரித்து பின்னர் அங்கும் இங்குமாக ஆட்டியது தீபாவிற்கு முன்.  ஆடாமல் அசையாமல் நின்றாள். அப்படியே எல்லாம் விறைத்துவிட்டதுபோல். இரத்தமே உடலில் உறைந்ததுபோல். ஆனால் … ஆனால் அந்த நாகம் விட்டதாக இல்லையே. மேலும் தனது கரிய உடலை அசைத்து அவளையே பார்த்தபடி நெருங்கியது. நாகம்! ‘ஐயோ அம்மா ஓடியாங்கோ.’ உரத்துக் கத்தினாள். அந்த நடுச்சாமத்தில் எல்லோரது நித்திரையையும் கலைப்பதாக. எத்தனை தடவைகள் கத்தினாளென்று அவளுக்கே தெரியாது. கண்களை இறுக்கி மூடியபடி கத்தினாள். ‘ஏன் ஒருத்தரும் எழும்பினமில்ல? ஒருத்தருக்கும் என்னைக் காப்பாத்த வேணுமெண்டு நினைப்பில்லையோ? ஐயோ! காப்பாத்துங்கோ.’ எங்கோ தொலைவில் தூங்கிக்கொண்டிருந்த சூரியனுக்குக்கூடக் கேட்டிருக்கும். சிலவேளை அதுகூட நடையைக்கட்டத் தொடங்கியிருக்கும். ஆனால் இந்த முண்டங்கள்
திருமாவளவன் காலமான செய்தியறிந்து மனது கனத்துக்கிடக்கிறது. இலக்கியத்துறையில் சக பயணி மட்டுமல்ல, ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து, கூர் கனடா தமிழ் கலை இலக்கிய ஆண்டுத் தொகுப்புகளில் ஆலோhசனைக் குழுவிலும் ஒருவராக இருந்த அவருடன் மிகநெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. சோகத்தின் இவ்வளவு கனதிக்கு இவையெல்லாமே காரணமாக முடியும். அவரது இழப்பில் வருந்தும் அவரது மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருடனும், உறவினர் நண்பர்களுடனும் என் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 2

இல்ஹாம் -மெலிஞ்சிமுத்தன் முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள் நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளே. ஒருநாள் நம்முன்னே எழும்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமானமாய் பதில் சொல்லியபடியே நகர்கிறோம். இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியே எட்டிப்பார்க்கிறேன். கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பி எதுவுமின்றி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் இல்ஹாம். ‘இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவன் எதற்காக என்னையே பின் தொடர்ந்தபடி இருக்கிறான்?’ என்ற கேள்வியுடனேயே வேலைக்கு வெளிக்கிடுகின்றேன். ‘இல்ஹாம், இல்ஹாம்’ என்று உதடுகள் உச்சரித்தபடியே இருக்கின்றன. நான் இல்ஹாமை சந்தித்த நாட்களைப்பற்றி பின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றது ஊர்காவற்றுறை என்ற எனது பிரதேசம். சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் இந்தியாவிலிருந்து கள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள் போன்றவை இத்துறையால் இறக்குமதி செய்யப்பட்டன என்றும், மிகப் பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளுக்கும் வியாபாரத்திற்குச் செல்பவர்களாக

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

(இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்) புலப்பெயர்வு, இடப்பெயர்வு, போரினதும் அது முடிந்த அழிவுகளின் மத்தியிலுமென பல்வேறுபட்ட கனத்த சூழ்நிலைமைகளிலிருந்து பெரிதாக நம்மிடையே இலக்கியம் பிறக்கவில்லையென பொதுவான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. இலக்கியப் பரப்பளவில் ஓரளவு இது உண்மையேயானாலும், ஆழமான பல சிறுகதைகளும், கவிதைகளும், எழுத்துகளும் இக் கடினங்களைப் பிளந்து பிறந்திருக்கின்றன என்பதை பெருமையாகச் சொல்லமுடியும். என் வாசிப்பில் அவ்வப்போது நான் எதிர்ப்பட்ட இவ்வகையான சிறுகதைகளை முதல்கட்ட முயற்சியாக எனது வலைப்பூவில் பதிவேற்ற எண்ணியதின் விளைவே ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள் (இலங்கையும் புலம்பெயர் நாடுகளும்)’ என்ற இந்தப் பகுதி. தோசை வட்டமாக இருப்பதே இசைவும் இணக்கமும் கொண்டது போலவே சிறுகதைக்கும் அதன் வடிவம் முக்கியம். அதை மட்டுமே முதன்மைப்படுத்தி எனது தேர்வுகள் இருக்காதபோதும், படைப்பாளியோ பதிப்பகமோ செய்த வகைமைப்பாட்டினை ஒதுக்கி என் தேர்வு அமைவதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற சிறகதையின் புராதன வரையறைவுகளில் பெரிய உடன்பாடு எனக்கில்லை. அதுபோல் அவை முற்றுமுழுதாக ஒதுக்கப்படவேண்ட

Woman in Gold - cinema

Image
  Woman in Gold (2015) யுத்தம் நிகழ்ந்த நிலங்களின் மனித வாழ்வெல்லாமே பாலை விதைத்த வறட்சியுடனேயே தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாரிய மனித சேதத்தை விளைத்த இரண்டாவது உலக யுத்தத்தில் அழிக்கப்பட்ட மனித வளம் கணக்கிட முடியாதது. மீட்டெடுக்க முடியாதது. ஆனாலும் கலை மற்றும் உடமைகள் சார்ந்த வி~யத்தில் பறித்ததைத் திரும்பக்கொடுத்தல் என்ற ஒரு சட்டம் பல்வேறு மேற்குலக நாடுகளிலும் நடைமுறையில் வந்ததிலிருந்து பறிக்கப்பட்ட கலைச் செல்வங்களை, முக்கியமாக புகழ்பெற்ற குடும்ப ஓவியங்களை, திரும்பப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஓரளவு வெற்றிகரமாக நடந்தேறிவருகிறது. இதுபற்றி ஓரளவு தொனிப்புக்கொண்ட திரைப்படங்கள் சில வெளிவந்திருப்பினும், இழந்த குடும்ப ஓவியத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பதுபற்றிய Woman in Gold திரைப்படம்போலவொன்று இதுவரை பார்வையாளன் கண்டிராதது. இரண்டாம் உலக மகாயுத்த சமயத்தில் போலந்தில் நிகழ்ந்த கொடுமைகளும் அழிவுகளும்போல் பாதிக்கப்பட்ட நாடு வேறில்லையெனச் சொல்லமுடியும். ஆனாலும் பறித்ததை மீட்டெடுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அங்கே இல்லாதபடியால் பலரும், குறிப்பாக யூதர்கள், தாங்கள் இழந்தவற்றைத் திரும்பப்பெற

போரின் உபவிளைவுகள்

போரின் உபவிளைவுகள் சிலவேளைகளில் சரித்திரத்தில் உதிர்க்கப்பட முடியாதன. -தேவகாந்தன் 2015 மாசி இருபத்தெட்டாம் நாள் இலங்கையிலிருந்து கனடா வந்து சேர்ந்தபொழுது, என் நீண்டகாலக் கனவான ‘கனவுச் சிறை’யின் வெளியீடு தமிழ்நாட்டில் தை 3ம் திகதியே நடந்திருந்ததில் அதுவரை, சுமார் மூன்று ஆண்டுகளாகவிருந்த மனவிறுக்கம் தளர்ந்து மனமீட்டம் பெற்றிருந்தேன். கடந்த மூன்றாண்டுகளாக என் மனம் முழுக்க நிறைந்து உணர்வுகளாய்க் குவித்திருந்த அடுத்த நாவலுக்கான வரிகள் மனத்தில் தளும்பிக்கொண்டிருந்தன. இலங்கையில் நண்பன் கேதாரியுடன் நான் தங்கியிருந்த இடமும் கரவெட்டியாக இருந்தவகையில், நாவலின் இயக்கம் துல்லியமாய்த் தளவமைவுகொள்ள அது வெகு ஆதாரமாயும் அமைந்திருந்தது, என் படைப்பின் தீவிரம்; படியாகாமல் அடங்க மறுத்திருந்த சமயம் அது. கொழும்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என என் பயண வழிகள்  நாட்டின் அழிவைச் சொல்லிக்கொண்டிருந்தன. கண்ட முகங்கள் துயரத்தின் வலிகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. பேசிய மனங்கள் துக்கத்தின் எல்லைகளைக் காட்டிக்கொண்டிருந்தன. எனினும் அதுபற்றிய பதிவு முன்னேவந்து எழுதத் தம்மை நிறுத்தாமல் விட்டிருந்தன. ஏதோ ஒருவகையில் எ

வாசிப்பின் சுகம்: 2

Image
அம்மாவின் ரகசியம் (குறுநாவல்) சுநேத்ரா கருணநாயக தமிழில்: எம்.ரிஷான்  ஷெரீப் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்;யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப்படைப்பு. இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்க
Image
கடந்த தை, மாசி மாதங்களில் இந்தியாவில் நான் தங்கியிருந்த நாட்களில் கர்நாடகாவிலுள்ள சிமாக்கோவுக்கு  என் பேர்த்தியைக் காணச் சென்றிருந்தேன். என்னை அவளும் அவள் கணவரும் கோவாவுக்கு இரண்டு நாள் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் அழைத்துச் சென்றார்கள். சென்ற வழியில் கர்நாடகா கோவா நெடுஞ்சாலையில் நாம் பயண இளைப்பாறிய இடம் இது. தேவிமனை காட் என்கிற இந்த இடம் அற்புத அழகு வாய்ந்தது. மலை விளிம்புச் சாலையில் ஒரு தாழ்வான இடத்தில்  ஒரு கோவிலும் இருக்கிறது. கோவாவில் நாம் சென்றுபார்த்த நூற்றாண்டுப பழமையான தேவாலயம் இது.

பாரபாஸ்

-தேவகாந்தன்  பேர் லாகர்க்விஸ்ட் என்கிற சுவீடிய எழுத்தாளரின் ‘பாரபாஸ்’  நாவலை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். க.நா.சு.வின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்த நாவலை அது வெளிவந்த 1995ஆம் ஆண்டிலேயே வாசித்திருந்தும், இருபதாண்டுகளுக்கு பிறகான இப்போதைய வாசிப்பிலும் நாவல் தன் வீர்யம் குறையாத அழகுடன் விளங்குவதைக் காண முடிந்திருந்தது. வாசிப்பின் சுகம் அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் மொழி, நடை ஆகியன நவீன எழுத்தியலின் ஊடாகக்கூட குறையாதிருந்தமை முக்கியமானது. இந் நாவல் 1950இல் வெளிவந்திருக்கிறது அதன் மூலமொழியில். இதன் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பு 1955இல் ‘அன்புவழி’ என்ற பெயரில் அ.கி.ஜெயராமனால் வெளியிடப்பட்டதை தமிழ் பதிப்புரை தெரிவிக்கிறது. மூல நாவலுக்கு 1951இல் நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு  மூன்று நான்கு ஆண்டுகளிலேயே   இதன் கலாநேர்த்தி கண்டறியப்பட்டு  க.நா.சு.வினால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிகிறபோது வியக்காமலிருக்க முடியவில்லை. 1953இல் அரங்காக்கமாகவும், 1961இல் அன்ரனி குயின் நடிப்பில் சினிமாவாகவும் பாரபாஸ் அடைந்த விருத்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. அ.கி.ஜெயராமனால்  வெளியிடப்ப