Posts

Showing posts from 2017

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 5

(அண்மையில்தான் ந.வினோதரனின் 'தவிச்ச முயல்' சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு பொலிஸ் விசாரணையின் கேள்வி பதில்கள் ஒரு கதையாக விரிந்த சிறப்பு எப்போதும் மனத்திலிருந்துகொண்டிருந்தது. இந்தவகையான உத்தி மிகவும் பழையதென்றாலும், மிக நுட்பமான கேள்வி-பதிலை அமைத்ததின்மூலம் ஒரு கதையே பின்னணியில் ஓடிக்கொண்டிருக்குமளவிற்கு அற்புதமாயமைந்திருக்கிறது கதை.) வேதாளத்திற்கு அளித்த வாக்குமூலம் ந.வினோதரன் “பெயரென்ன?” “அன்பழகன்.” “முழுப்பெயரைச் சொல்லு.” “அண்ணாமலை அன்பழகன்.” “ஊரு?” “யாழ்ப்பாணம்.” “யாழ்ப்பாணம் எங்கு?” “சாவகச்சேரி.” “சாவகச்சேரி அற்றஸ் சொல்லு.” நாச்சிமார் கோயில் வீதி, கல்வயல், சாவகச்சேரி.” “டேற் ஆவ் பேர்த்?” “22-09-1984.” “வயசு?” “இருபத்தஞ்சு.” “ஐ.சி.நம்பர்?” “841363140.” “பிறந்தது?” “பளை ஆஸ்பத்திரி.” “யவ்னாவில கொஸ்பிடல் இல்லையா?” “சாவகச்சேரியிலும் இருக்குது. ஆனால் அம்மம்மா வீடு பக்கத்தில எண்டதாலயாம்.” “அப்பாட முழுப் பெயர்?” “வல்லிபுரநாதர், கதிர்காமர், அண்ணாமலை.” “அப்பா என்ன வேலை?” “ஊரில வயல் இருந்தது. இப்ப வேலையில்லை.” “எத்தனை

கலிங்கு-நாவல்

ஈழத்தைக் களமாகக்கொண்டு பயணிக்கும் நாவல் மிகுந்த உழைப்பைக் கோரிநின்றது. பலரும் கவனம் குவிக்காத அல்லது கவனத்தை மறைத்திருந்த திரைகளை விலக்கி அது காட்டும் திசைக்கோணம் நிச்சயமாக வாசகனை அதிரவைக்கும். இது அரசியல் பிரதியல்ல. எனினும் இது அரசியலைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. இதன் அர்த்தம், நிஜங்களின் இழைகளில் இது தனக்கான நியாயத்தை நெய்திருக்கிறது என்பதுதான். பாணனும், நிலாவும், சங்கவியும், நாகாத்தையும், பரஞ்சோதியும், குசுமவதியும், லோகீசனும், குணாளனுமென பெரும்பெரும் ஊழிகளை வாழ்ந்து கழித்தவர்களின் கதை இது. இவ்வாண்டு முடியும் முன்னர் பிரதி ரூபமெடுத்து வரும். சந்திப்போம். 0

எனக்குப் பிடித்த சிறுகதைகள்:4

பாலன் பிறப்பு -முல்லை யேசுதாசன்- அருளர் கள்ளுக்கு போய்ட்டு வாறாரெண்டால், வளிச்சலில் நல்ல மீன் பட்டிருக்கும். அதில்லெயெண்டால் அண்டைக்கு நேவியடிச்சு, வளிச்சல் தொழிலாளர் ஆரும் வலையை வெட்டிப்போட்டு வர, இவர் தேடிப்போய் வலைகளைக்கொண்டு வந்திருப்பார். அதுவுமில்லையெண்டால் கடலில நல்ல சண்டை நடந்திருக்கவேணும். இயக்கம் நல்ல அடி குடுத்திருக்கவேணும். கடலைப்பற்றியோ அல்லது கடல் தொழிலைப்பற்றியோ ஏதேனும் கேக்கவேணும் எண்டால் அந்தாளைக் கேட்டா அச்சொட்டா பதில் சொல்லும். காலமை விடிய மூண்டு மூண்டரைக்கு எழும்பி, மண்டானுக்க நிண்டு சூடவலை, அறக்கொட்டியான் போகிற குல்லாக்களை இறக்கிக் குடுத்து… வளிச்சல் வள்ளங்கள் வந்தால் மீன் வெட்டிக் குடுத்து… கருவாடு போட்டு… இப்ப அதுதான் அவரின்ர தொழில். எப்படியும் நூறு ரூபா உழைச்சுப் போடுவார். சில நாள் கறிமீனோட காலம் போகும். அண்டைக்கு ஆரோடையும் கதைக்கமாட்டார். ‘ஏனப்பா, இண்டைக்கொண்டும் வாய்க்கேல்ல. ஏதேனும் பாரன்’ எண்டு மனிசியிட்டை சரணடைஞ்சு போடுவார். அன்றைக்கு மனிசி என்ன பேசினாலும் கேட்பார். ‘ஏனப்பா, உந்த குடிக்கிற காசுக்கு ஏதேனும் நல்ல சாப்பாட்டை சாப்பிடலாம்தானே’

புகையில் விழுந்த விருப்பம்

இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு ஆகிய இரண்டு அலைவரிசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐம்பதுகளின் இறுதியில் இயங்கியதென ஞாபகம். தேசிய ஒலிபரப்பு காலை எட்டு மணிக்கு முடிய வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து பத்து மணிவரை தொடர்ந்தது. மாலையில் மூன்று மணிக்கு வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடிய மேலே இரவு பத்தரை மணிவரை தேசிய ஒலிபரப்புத் தொடரும். தேசிய ஒலிபரப்பில் செய்திகளும், வர்த்தக ஒலிபரப்பில் நீங்கள் கேட்டவையிலிருந்து, இசையும் கதையும், திரைப் படங்களின் ஒலிச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகள் அனேகமாக எல்லார்க்கும் பிடித்தமான நிகழ்ச்சிகளாக இருந்தன. நான் கேட்டது வர்த்தக ஒலிபரப்பு. ரசித்தது சினிமாப் பாடல்கள். அந்த வயதில் எனது ரசனை வேறுவாக இருக்கவில்லை. வசதியாக பெரி றேடியோ பற்றியில் இயங்கிய வானொலி ஊரிலிருந்த மூன்று வீடுகளுள் எங்களதும் ஒன்று. பள்ளி நாட்களில் தாமதமானாலும் நான் வீடு வந்த நேரத்திலிருந்து ஆறுமணிவரை உச்சத் தொனியில் றேடியோ அலறுகிற ஒரு வீடாகவும் இருந்தது எங்களது. அக்காலத்தில் ஒலிபரப்பாகிய சினிமாப் பாடல்களைக்கூட என்னால் இன்றும் ஞாபகம்கொள்ள முடிகிறது. வ

ஊர்கள் அடங்கிய இரவுகள்

- தேவகாந்தன் மனிதகுலம் என்றைக்குமே யுத்தத்தை விரும்பியிருந்ததில்லை . ஆனாலும் யுத்தம் எப்போதும் நடந்தே வந்திருக்கிறது . நேபாம் குண்டுகளாலும் , கனரக வாகனங்களின் ஷெல் வீச்சுகளினாலும் , ஏவுகணைகளாலும் நடத்தப்படும் யுத்தங்களில்போலவே , இறந்த மிருகங்களின் எலும்புகளினாலும் , மரங்களில் செதுக்கியெடுத்த   கதாயுதங்களாலும் நடந்த யுத்தங்களிலும் அழிவுகளே நிகழ்ந்தன . யுத்தத்தில் அழிவைத் தவிர   வேறெதுவும்   எஞ்சுவதில்லை . யுத்தத்தின் தோல்விகளில்போலவே   வெற்றிகளிலும்கூட   எஞ்சுவது   அழிவுதான் . மனித குல வரலாறு முழுக்க   பரந்துகிடக்கின்றன யுத்தங்கள் . நிலத்துக்காகவும் , பெண்ணுக்காகவும் , பொன்னுக்காகவும்    ஆதி யுத்தங்கள் நடந்தனவெனில் , பொருளதிகாரத்துக்கானதாக   இருக்கின்றன   நவகால யுத்தங்கள் . பொருளதிகாரமென்ற ஒற்றைச் சொல்லில் அவற்றின்   முழுக் காரணமும் தங்கியிருக்கிறது . ஆனால் எழுதப்பட்ட எந்த வரலாற்றின்   நெடும்பரப்பிலும்   இந்த உண்மை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது . வரலாற்று   உண்மை நிஜமாகவே அதன் சொல்லுதலில் இருக்கிறது எனப்படுகிறது . சொல்லுத