Posts

Showing posts from August, 2020

நமது முகங்களை நோக்கி... (கனவுச் சிறையின் மதிப்புரை) எஸ்.எல்.எம்.ஹனிபா

  Slm Hanifa 10 டிசம்பர், 2014  ·  சென்ற மாதம் நமது ஆளுமை மிக்க படைப்பாளிகளில் ஒருவரான அன்பன் தேவகாந்தனின் கனவுச் சிறை என்ற மகாநாவலை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாவலுக்கான ஒப்புநோக்கும் பணியை என்னிடம் காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் கையளித்த போது, பெரும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும், உள்ளே ஒரு தயக்கம் கண் சிமிட்டியது. காரணம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாவல் இலக்கிய வரலாறும் அதனால் பெற்றுக் கொண்ட ஆக்கினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அனுபவங்களின் ஆக்கினைகளுடன்தான் நானும் எனக்கு உதவியாக என் அருமை அன்பன் இரா சிவலிங்கம் (ஆசிரியர், கண்டி திருத்துவ கல்லூரி) அவர்களையும் இணைத்துக் கொண்டு இருவருமாக மாறி மாறி வாசிக்கத் தொடங்கினோம். தேவகாந்தனின் அழகிய மொழியும், கதையை அவர் நகர்த்திச் செல்லும் பாங்கும் ஒரு தீர்க்கதரிசியின் எதிர்வுகூறலும் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புத்தம் புதிய சாளரத்தைத் திறந்து காட்டிற்று. கனவுச் சிறை 982 பக்கங்களில் 5 பாகங்களாக ஒரு மகா நாவலாக விரிகிறது. 1981-83 ஆகிய கால கட்டங்களின் கதையை "திருப்படையாட்சி" எனும் மகுடத்தில் முதலாம் பாகம் எ

கனவுச் சிறையும்,காலத்தின் திறப்பும்

  24 டிசம்பர் , 2014, முற்பகல் 9:18   இதோ ஒரு மனிதர் ஆரவாரங்களற்று நடந்து வருகிறார் . சுடச்சுடச் சுண்டல் , சுண்டலென்று கூவி வரும்   ஒரு வண்டிக்காரன் போலவோ ,   கடலின் ஈரம் காயாத காலோடு ' உடன் மீன் ' விற்கவரும் ஒரு வியாபாரியைப் போலவோ இவரைக் கண்டுவிடாதீர்கள் . அந்த மக்களின் உணர்வுகளையும் சேர்த்து ' கனவுச் சிறைக்குள் ' காலத்தைச் சுமந்து வரும் ஈழத்துக் கலைஞனிவர் . வரலாற்றுக் கடமையாய் எழுத்தை உணர்ந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர் . இத்தனை பாத்திரங்களைச் சுமந்து , இத்தனை நுண்ணுணர்வுகளைப் பேசி ஓயாமல் நடந்துவரும் எங்கள் அண்ணனை எழுத்தால் முத்தமிட்டு வாழ்த்துகின்றோம் .   ஆதரித்து நடக்கவும் , விலகி நடக்கவும்கூடிய   கூட்டங்கள் , கும்பல்கள் எல்லாவற்றிற்கும் நடுவில் இருந்தபடியேதான் நடைப் பந்தையம் செய்யாத இந்த மனிதனை நாம் வாழ்த்துகின்றோம் . கதைக்குள் அள்ளிக்கொட்டிய காலத்தை நீவி , நீவி விதையைக் கண்டுணர்வோம் வாசகரே .      -         மெலிஞ்சி முத்தன்

நதிமேல் தனித்தலையும் சிறுபுள் (மதிப்புரை ) டி.சே.இளங்கோ

  தேவகாந்தனின் , ' நதிமேல் தனித்தலையும் சிறுபுள் ' --------------------------------------------- 1. பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது வாசிப்பதற்கு நாவல்கள் எங்களுக்கு இருந்தன . ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால் , இன்னொருபுறம் என்னைப் போன்ற ' புலம்பெயரி ' களுக்கு அந்த நாவலின் சூழல் , பாத்திர வார்ப்புக்கள் எல்லாமே முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன . அதனால் பல நாவல்களை ' சும்மா ' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன் . அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby, To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு . எனக்குத் தெரிந்த நகரை , எனக்குப் பரிட்சயமான வாழ்வை , என்னைப் போன்ற மண்ணிற மக்களின் கதைகளைச் சொல்பவர்களாக , எம் . ஜி . வாஸன்ஜி , ஷியாம் செல்வதுரை போன்றவர்களைப் பிறகு கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது . என்னைப் போன்ற பாத்திரங்கள் இவர்களின் நாவல்களில் இருக்கின்றார்களேயென , அவர்களை ந