Posts

Showing posts from January, 2019

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்

Image
என்னுரை வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியலின் விளைவுகள் எனப்படுகிறது . அதனாலேயே காதலும் காமமும் யுத்தங்களின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்பெற்று , அவற்றின் தோல்விகளாலும் வெற்றிகளாலும் அதன் முழுப் பரப்பும் மூடப்படுகின்றது . தோற்றவர் வடுக்களும் , வென்றவர்   ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும் , யுத்தத்தின் மூலகாரணம் அதில் முற்றாக   நிராகரிக்கப்படுகிறது . பலவேளைகளில் நிஜங்கள் திரித்தும் எழுதப்படுகின்றன . நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே . ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று   நிரூபணமாகியுள்ளது . தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப் போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம்தான் . ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்களென்ற நம்பிக்க

நற்றிணையின் வெளியீடாக 2019 சென்னை புத்தக கண்காட்சியில்...

Image
என்னுரை என்னுடையவற்றில் ஆகக் குறைந்த பக்கங்களைக் கொண்ட இந்த 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' நாவலுக்கும் வழமையான பக்கங்களில் நீள என்னுரைக்கான விஷயங்கள் என்னிடத்தில் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் வேறு களமும் குணமும் பாத்திரங்களும்கொண்ட இந்நாவலுக்கான என்னுரையை குறுவடிவில் அமைத்துவிடுவதே என் தீர்மானம். குறுமுனிபோல் தன் பெருவிகாசம் அடக்கியே இந்நாவலும் தன்னுள் சுருங்கிச் சுருங்கி இந்த வடிவத்தை இறுதியாக எடுத்திருப்பதில் இந்த முடிவு பொருத்தமானதுதான். மூதினங்கள் பலவற்றின் ஐதீகங்களிலும் உள்ளோடியுள்ள ஆன்மீக ஒருமையே இந்நாவலின் ஆதாரமாய் நான் கருதுகிறேன். நைல் ஆரஸ் தைகிரிஸ் நதிதீர இனக் குழுமங்களினதைப் போலவே, நீர்வளமேயற்ற இலங்கை வடபகுதியிலுள்ள தமிழ்க் குமுகாயத்தின் ஐதீகங்களும் ரத்தமும் சோகமுமான நீள் வரலாறுகொண்ட கனடாவின் செந்நதிதீரத்தில் கொள்ளும் உறவு தமிழ் நாவல் பரப்பின் புதிய பிரதேசம். சிவப்பிரகாசமும் மங்களநாயகியும் வின்ஸியும் ஒரே சமூகத்தினதும்  கலாசாரத்தினதும் பிரதிநிதிகள்தான். ஆயினும் புத்துலகின் இறுகும் கண்ணிகளிடையே ஒரு புள்ளியில் எவ்வாறு அவர்கள் இணங்கியு