Posts

Showing posts from June, 2020

கனடிய இலக்கியத்தின் வரைபடத்தில் கனடிய நாவல்கள் - தேவகாந்தன்

Image
தனது பல்வேறு நாட்டினங்களது இலக்கிய முயற்சிகளுக்கும் களமாக இருக்கிற ஒரு தேசம் கனடாவென்றே   தோன்றுகிறது. அதன் பல்லின, பல் கலாச்சார கொள்கைக் கூறுகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு மேலேதான் வலிவுபெறத் தொடங்கினவென்றாலும், அது சார்ந்த அதன் இன்றைய இலக்கிய வளம்   மிகுந்த கூர்மை பெற்றிருக்கிறது. கல்விமுறை சார் ஆங்கில இலக்கியப் பரிச்சயமுள்ள பலருக்கு அதன் இன்றைய நவீன இலக்கியத்தின் வீச்சு காணப்படாதது. ஆங்கில   இலக்கியமென்று பொதுப்படச் சொல்வதனாலேயே அதன் தனித்துவமும் காணாமல் போய்விடுகிறது. அதனால் கனடிய ஆங்கில இலக்கியமென்ற பதச் சேர்க்கை அதன் தனித்துவத்தை நிலைநிறுத்துவதாய் இருக்கமுடியும். கனடாவின் இலக்கிய வளத்தினுக்கு     ஆசியா ஆபிரிக்கா தென்னமெரிக்கா மற்றும் ஐரோப்பாவென பல கண்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்த மக்களிடையே தோன்றிய படைப்பாளிகளின் பங்களிப்புகள் கனடிய இலக்கியத்தின் இன்றைய உன்னதத்தின் பிரதம காரணங்களாக இருக்கின்றன. கனடிய ஆங்கில மொழி, கனடிய பிரெஞ்சு மொழி, கனடிய காலிக் (Canadian Gaelic) மொழியில் மட்டுமன்றி கனடிய பூர்வீக மக்களின் மொழிகளிலும் இன்று கனடாவில் இலக்கியம் ப

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

Image
மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்: மறுமலர்ச்சி இதழ்த் தொகுப்பினை முன்வைத்த நோக்குநிலை -தேவகாந்தன்- காலக் குழறுபடிகளால் இயங்கமுடியாத நிலையிலிருந்து மீண்டெழுந்த பின்னால் ‘லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனா’ சிறுகதையை முடித்ததும் நான் வாசிக்கத் தொடங்கிய நூல் ‘மறுமலர்ச்சி’ இதழ்த் தொகுப்பாகவிருந்தது. அத் தொகுப்பிலுள்ள செல்லத்துரை சுதர்சனது ‘ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சிக் காலம்: வரலாறும் மதிப்பீடும்’ என்ற ஆய்வுரையினடியாகத் தொடர்ந்த அவ்வாசிப்பு கிளர்த்திய சிந்திப்புக்களதும் எண்ணங்களதும் பதிவாக உருவானதே இவ்வுரைக் கட்டு.             ஓர் ஆய்வுக் கட்டுரையின் ஒழுங்கமைவும் தெளிவும் அடர்த்தியும் கொண்டிருந்தது அக்கட்டுரை. முதலில் இருப்பதனால் மட்டுமன்றி, தொகுப்பில் முதன்மையானது என்பதனாலும் அதுபற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிட நேர்ந்தது. மறுமலர்ச்சி’யின் சில இதழ்களே முன்னர் பார்வைக்குக் கிடைத்திருந்த நிலையில், அவற்றின் ஒட்டுமொத்தமான தொகுப்பின் வாசிப்பு மிக்க   பெறுமதியாக இருந்திருக்குமென்பதை எடுத்துக் கூறவேண்டியதில்லை. மறுமலர்ச்சி இதழ்கள், இறுகிப்போய்க் கிடந்த தமிழ்ச் சமூகத

கனவுச் சிறைபற்றி

( கனவுச் சிறை நாவல்பற்றி வாசகரொருவர் 2015இல் எழுதி அனுப்பிய மதிப்புரை இது. எழுதிய வாசகர் பெயர் சேகரமாகவில்லை. தேடிக்கொண்டிருந்தேன். இன்று பதிவிடுவது அந்த வாசகருடனான தொடர்பினை அடைய. தேவகாந்தன்)  இலங்கை அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம் திருப்பதி மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு செல்வது ஏன் ? ஸ்டண்டாக இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு . நான் நினைத்தது தவறு . இலங்கை பௌத்தத்தில் விஷ்ணு வழிபாடு இருக்கிறது . எழுத்தாளர் தேவகாந்தனின் “ கனவுச்சிறை ” நாவலை வாசித்த போதுதான் எனக்கு இது தெரிய வந்தது . ஈழப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான காலவோட்டத்தை ஒரு குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வின் நோக்கில் காப்பியமாக படைத்திருக்கிறார் தேவகாந்தன் . சங்கரானந்தர் என்கிற ஒரு அருமையான பாத்திரத்தை நாவலில் உருவாக்கியிருப்பார் தேவகாந்தன் . அந்தப் பாத்திரம் அவருக்கு நேரெதிரான எண்ணங்களைக் கொண்ட இன்னொரு புத்தபிக்குவுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும் . +++++ ” நிகழ்வின் சாத்தியம்தான் வரலாறு . இரண்டு காலங்களை … இரண்டு எல்லைகளை … இரண