Posts

Showing posts from September, 2015

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 2

இல்ஹாம் -மெலிஞ்சிமுத்தன் முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள் நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளே. ஒருநாள் நம்முன்னே எழும்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமானமாய் பதில் சொல்லியபடியே நகர்கிறோம். இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியே எட்டிப்பார்க்கிறேன். கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பி எதுவுமின்றி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் இல்ஹாம். ‘இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவன் எதற்காக என்னையே பின் தொடர்ந்தபடி இருக்கிறான்?’ என்ற கேள்வியுடனேயே வேலைக்கு வெளிக்கிடுகின்றேன். ‘இல்ஹாம், இல்ஹாம்’ என்று உதடுகள் உச்சரித்தபடியே இருக்கின்றன. நான் இல்ஹாமை சந்தித்த நாட்களைப்பற்றி பின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றது ஊர்காவற்றுறை என்ற எனது பிரதேசம். சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் இந்தியாவிலிருந்து கள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள் போன்றவை இத்துறையால் இறக்குமதி செய்யப்பட்டன என்றும், மிகப் பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளுக்கும் வியாபாரத்திற்குச் செல்பவர்களாக

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

(இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்) புலப்பெயர்வு, இடப்பெயர்வு, போரினதும் அது முடிந்த அழிவுகளின் மத்தியிலுமென பல்வேறுபட்ட கனத்த சூழ்நிலைமைகளிலிருந்து பெரிதாக நம்மிடையே இலக்கியம் பிறக்கவில்லையென பொதுவான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. இலக்கியப் பரப்பளவில் ஓரளவு இது உண்மையேயானாலும், ஆழமான பல சிறுகதைகளும், கவிதைகளும், எழுத்துகளும் இக் கடினங்களைப் பிளந்து பிறந்திருக்கின்றன என்பதை பெருமையாகச் சொல்லமுடியும். என் வாசிப்பில் அவ்வப்போது நான் எதிர்ப்பட்ட இவ்வகையான சிறுகதைகளை முதல்கட்ட முயற்சியாக எனது வலைப்பூவில் பதிவேற்ற எண்ணியதின் விளைவே ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள் (இலங்கையும் புலம்பெயர் நாடுகளும்)’ என்ற இந்தப் பகுதி. தோசை வட்டமாக இருப்பதே இசைவும் இணக்கமும் கொண்டது போலவே சிறுகதைக்கும் அதன் வடிவம் முக்கியம். அதை மட்டுமே முதன்மைப்படுத்தி எனது தேர்வுகள் இருக்காதபோதும், படைப்பாளியோ பதிப்பகமோ செய்த வகைமைப்பாட்டினை ஒதுக்கி என் தேர்வு அமைவதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற சிறகதையின் புராதன வரையறைவுகளில் பெரிய உடன்பாடு எனக்கில்லை. அதுபோல் அவை முற்றுமுழுதாக ஒதுக்கப்படவேண்ட

Woman in Gold - cinema

Image
  Woman in Gold (2015) யுத்தம் நிகழ்ந்த நிலங்களின் மனித வாழ்வெல்லாமே பாலை விதைத்த வறட்சியுடனேயே தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாரிய மனித சேதத்தை விளைத்த இரண்டாவது உலக யுத்தத்தில் அழிக்கப்பட்ட மனித வளம் கணக்கிட முடியாதது. மீட்டெடுக்க முடியாதது. ஆனாலும் கலை மற்றும் உடமைகள் சார்ந்த வி~யத்தில் பறித்ததைத் திரும்பக்கொடுத்தல் என்ற ஒரு சட்டம் பல்வேறு மேற்குலக நாடுகளிலும் நடைமுறையில் வந்ததிலிருந்து பறிக்கப்பட்ட கலைச் செல்வங்களை, முக்கியமாக புகழ்பெற்ற குடும்ப ஓவியங்களை, திரும்பப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஓரளவு வெற்றிகரமாக நடந்தேறிவருகிறது. இதுபற்றி ஓரளவு தொனிப்புக்கொண்ட திரைப்படங்கள் சில வெளிவந்திருப்பினும், இழந்த குடும்ப ஓவியத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பதுபற்றிய Woman in Gold திரைப்படம்போலவொன்று இதுவரை பார்வையாளன் கண்டிராதது. இரண்டாம் உலக மகாயுத்த சமயத்தில் போலந்தில் நிகழ்ந்த கொடுமைகளும் அழிவுகளும்போல் பாதிக்கப்பட்ட நாடு வேறில்லையெனச் சொல்லமுடியும். ஆனாலும் பறித்ததை மீட்டெடுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அங்கே இல்லாதபடியால் பலரும், குறிப்பாக யூதர்கள், தாங்கள் இழந்தவற்றைத் திரும்பப்பெற