Posts

Showing posts from May, 2020
Image
என் அன்பான வாசகர்களுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு  உரைவடிவில் நிகழ்த்தும் நேர்ச் சந்திப்பு இது.  devakanthanswriting.blogspot.com  என்ற இந்த  வலைப் பூவில் என் எழுத்துக்கள்பற்றிய பிறரின் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் வெளிவரும் என்பதோடு, இதுவரை எந்த இணையத்திலுமோ பத்திரிகை சஞ்சிகைகளிலுமோ வெளிவராத எனது எழுத்துக்களும் பதிவாகும் என்பதை வாசகர்கள் மனங்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். devakanthan.blogspot.com என்ற வலைப் பூவில் ஏற்கனவே வெளியான எழுத்துக்கள் பதிவாகும். அதிகமாக இந்த வலைப் பூவில் புதிய என் எழுத்துக்கள் வெளிவருவது மிகவும் குறைவாக உள்ளதை நான் காண்கிறேன். அதனால் ஜுன் 2020 இலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் வாசித்த நூல் மதிப்புரைகளையோ, என் நினைவு மீட்புக்களையோ, நான் கண்ட கேட்ட முக்கியமான நிகழ்வுகளையோ பதிவேற்ற திட்டமிட்டிருக்கிறே ன். வழமைபோல்  என் எழுத்துக்கள் சார்ந்த உங்கள் பின்னூட்டங்களைப் பதிவிட அன்போடு வேண்டுகிறேன்.  ஜுன் 2020 இன் முதல் ஞாயிற்றுக் கிழமை சந்திப்போம். நன்றி.

தேவகாந்தனின் 'கலாபன் கதை' சஞ்சயன் (முகநூல் பதிவிலிருந்து)

எங்கள் பால்யக்காலத்தில் கப்பலுக்கு வேலைக்குச் சென்று ஊர் திரும்பியவர்களை வாய்பிளந்து நின்று பார்த்திருக்கிறோம். நினைத்தால ே இனிக்கும் திரைப்பட கமல், ரஜனி போன்றிருப்பார்கள். தொப்பி, கூலிங்கிளாஸ், நாகரீக டெனிம் உடைகள், வாசனைத் திரவியங்கள் தொடக்கம் பாதணிவரை, வெளிநாட்டில் வாங்கியதாக இருக்கும். நிட்சயமாக உள்ளாடையும். அவர்கள் மோட்டார் சைக்கில் வைத்திருப்பார்கள். கலர் டீ.வி, வீடியோ டெக், டேப் ரெக்கார்டர் அவர்கள் வீட்டில் இருக்கும். பணம் தாராளமாகப் புரளும். அவர்கள் ஊரில் நிற்கும் காலமானது திருவிழாக்காலத்தில் கடவுக்குக் கிடைக்கும் விசேடமான உற்சவம் போன்றது. முடிந்த திருவிழாபோல் ஓரிரண்டு வாரத்தில் இவர்கள் மீண்டும் கடலுக்குள் புகுந்துவிடுவார்கள். இப்படியான கடலோகளைப்பற்றி சிறுகதைகள் வாசித்திருந்தாலும் நேற்றுவரை, ஒரு நாவல் வாசித்ததில்லை. தேவகாந்தனின் ‘கலாபன் கதை’ ஒரு யாழ்ப்பாணத்துக் கடலோடியின் கதை. மிக அற்புதமான நாவல். மிகத் தேர்ந்த கதைசொல்லியின் மொழிலாவகத்தோடு சுவராசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கடலனுபவம் அற்ற, திருமணமான, ஆனால் வருமானமில்லாத ஒருவர், திரைகடல் ஓடித் திரவியம் தேடப்புறப்ப

தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம் - ஒரு பார்வை' சுல்பிகா

யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்ற தேவகாந்தனின் நாவல் , பத்து பகுதிகளையும் பதினெட்டு அத்தியாயங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 1800 களிருந்து 1975 வரையான 175 வருட காலப்பரப்பினை உள்ளடக்குகின்றது. எனது கட்டுரை   1970 வரையான காலப்பகுதியில் அமைந்த எட்டு அத்தியாயங்களின் கதை மூலங்களை /ஆதாரங்களை மாத்திரமே கவனத்திற்கொண்டு எழுதபபட்டுள்ளது. நாவல்கள் , சிறுகதைகள் கொண்ட தொகுதிகளென இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் படைத்திருக்கின்றார். இருந்தபோதிலும் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்கு எனறு ஒரு வேறுபட்ட சிறப்பு பரிமாணம் உண்டு. அதாவது இந்த நாவலின் கதை, புனைவு இலக்கியத்தின் தன்மைகளுக்கு அப்பால், சற்றுத்தூக்கலாகவே சமூக , அரசியல் விடயங்களை அலசுகின்றதாக பின்னப்பட்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இந்த நாவலின் தலைப்பும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இது மக்களின் கதை என்ற வகையிலோ அல்லது யுத்தகால சமூகக்கதை எனற வகையிலோ தலைப்பிடப்படவில்லை. ஒரு சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போல் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்றே தலைப்பிடப்பட்டிருக்கின்றது. அதன் உள்ளடக்கமும் அவ்வாறே அமைந்திருக்கின்றது. இந்த வகைய