Posts

Showing posts from 2021

பாரதியார் இன்கவித் திரட்டு

  வயதைச் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. சுமாராக எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கலாம். சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு முன்னாலிருந்த சரஸ்வதி  புத்தகசாலையிலே முதன்முதலாக நான் வாங்கிய பள்ளி சாரா நூல் ‘பாரதியார்இன் கவித்திரட்டு’. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தொகுத்தது. அப்போது அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அந்தப் பெயர் அல்லது அந்தப் பெயர்போல் ஒன்று எனக்குப் பரிச்சயமானதுபோல்தான் தோன்றியிருந்தது. பாரதியாரின் கவிகளின் திரட்டு என்ற பொருள்படும்படியாகவா, பாரதியாரின் இனிய கவிகளின் திரட்டு என்று பொருள்படும்படியாகவா நூலின் பெயர் இருந்ததென்று வெகுநாள் வரையில் எனக்குத் தெளிவில்லை. நூலின் முதலாம் பகுப்பில் ‘பாரத தேசம்’, ‘பாரத நாடு’ போன்ற தலைப்புகளின் கவிதைகள் என் கண்ணில் பட்டன. படித்தபோதும் அவை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. என் வீட்டுக்கு அயலிலுள்ள வீடுகளில். நேரு, சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மா காந்திபோன்றோரின் சட்டம் போட்ட படங்கள் சுவர்களில் தொங்கியதில் பாரதமென்பதை அந்நியமான தேசமாக என்னால் கணிக்கமுடியாது போனது. அதுபோலவே பள்ளியில் ஒவ்வொரு நாளும் கடவுள் வ

விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி

  விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி - ந. இரவீந்திரன். “ஜீவந தி” இன் ஈழத்து நாவலிலக்கியச் சிறப்பிதழுக்கு ஒரு படைப்பாளியின் புதிய மிலேனியத்துக்கான படைப்புகளைப் பேசுபொருளாக்க வேண்டும் என்ற பொழுது எந்தத் தயக்கமுமின்றித் தெரிவு செயதாக வேண்டிய படைப்பாளியாக முற்பட்டு நின்றவர் தேவகாந்தன். அவரது படைப்புகளது விரிந்த தளங்களும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான வீச்சான அவருடைய கருத்தியல் புலமும் கள அனுபவங்களை உள்வாங்கி வடிவப்படுத்திய பாங்கும் எனப் பல காரணங்களால் இந்தத் தெரிவு அவசியப்பட்டது. அதனை ஒரு கட்டுரைக்குள் அடக்குவது என்பது மிகுந்த சிரமத்துக்கு உரியது. ஒரு தனி நூலுக்கு உரிய களம் அது. விரித்துப் பேச அவசியப்படுகிற விடயப்பொருளுக்கான முன்னுரைக் குறிப்பாக இக்கட்டுரை அமைகிறது. இங்கு கவனங்கொள்ள வேண்டியுள்ள காலப் பரப்புக்கான தேவகாந்தனின் நாவல்கள் (ஜூலை 2019 இல் காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘கலாபன்’ நாவலில் இடம் பெற்ற ஒழுங்குப் பிரகாரம்): 1. லங்காபுரம், 2. கதாகாலம் (மகாபாரத த்தின் மறுவாசிப்பு), 3. யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 4. நிலாச் சமுத்திரம், 5. கனவுச் சிறை, 6. கந்தில் பாவை, 7. கலிங்கு, 8. ந திம
Image
  கறாரான முடிவுக்கு வராத கலகத்தின் ஆதரவாளரா தேவகாந்தன் ? தேவகாந்தனின் ' எதிர்க்குரல்கள்'   உரைக்கட்டுத் தொகுப்புப் பற்றிய ஒரு ' கலக்கப் பார்வை' ! இ . இராஜேஸ்கண்ணன் --------------------------------------------------------------------------------------------------------------------------                கார்ல் மார்க்ஸ் தனது இயங்கியல் சிந்தனைக்கான அடிப்படை மெய்யியல் தளத்தை ஹெகல் , ஃபுவர்பாக் என்பவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார் . இயங்கியல் தத்துவத்தின் அடிப்படைக் கருத்து ( Thesis ), எதிர்க்கருத்து (Anti-Thesis), புதுக்கருத்து (Synthesis) என்பவற்றின் தொடருறுதன்மையை விளக்குகின்றது . வரலாற்றின் வளர்ச்சியில் இந்த இயங்கியலை கண்டுகொள்ளலாம் . கருத்துநிலை உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும்கூட இந்த இயங்கியல் உள்ளுறைந்திருக்கும் . கருத்து ஒன்றுக்கு எதிர்க்கருத்து உருவாகும் அது இருந்துவந்த கருத்துநிலையை புதிய தளத்துக்கு இட்டுச்செல்லும் என்ற சாதாரண இயங்கியலை மறுத்துரைப்பவர்கள் இன்றும்கூட இருப்பார்களாயின் அது தேக்கநிலையின் அறிகுற