கலித்தொகைப் பாடல்கள்... 31
ரசனைக் குறிப்புகள்: 31 என்மீது குறைசொல்லாதே! ‘என் பார்வையை எதிர்ப்படும்போது கையெடுத்துக் கும்பிடுகிறான். பிறர் பார்த்துவிடுவார்களே என்றும் யோசிக்கிறானில்லை. ஊருக்குத் தெரிந்தால் பழியாவிவிடும் எனச் சைகை பண்ணும்போது, போவதா வேண்டாமாவென யோசித்துக்கொண்டு நிற்கிறான். எடியே, இவனை என்ன செய்தால் தகும்?’ (என, தலைவி கேட்டதற்கு, தோழி சொல்கிறாள்: ) ‘நானே உன்னைக் கூப்பிட்டு இங்கே கூட்டிவந்து விட்டேன் என்பதால் என்மீது குறை சொல்லாதே! நீயே அவனுடன் பேசித் தீர்த்துக்கொள். என் தோளில் தொய்யில் எழுத குளம்பு எடுப்பதுபோல் சென்று அவனுக்குக் கிட்டவாக நிற்கிறேன், நீ, இங்கேயா நிற்கிறாய் என்பதுபோல் என்னைத் தேடி அங்கே வந்து சேர். நீயே மருந்தானதால், நின்றபடியே உன் காலில் விழுந்து உன்னை அவன் இறைஞ்சுகிறானா இல்லையா, பார்! (தோழி கூற்று:) சரி; ஆனால் நான் உடன்பட்டதாய் அவனுக்குச் சொல்லிவிடமாட்டேன் என என் கையிலடித்துச் சத்தியம் பண்ணு! (தோழி தொடர்கிறாள்:) முழுவதும் கேள்: நீ அவனோடு பேசும்போது நான் அருகில் நின்றால் ...