Posts

Showing posts from 2023

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில்

Image
     குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் -தேவகாந்தன்   சங்க இலக்கியத்தின் மிகப்பெரும் சிறப்பும் பலமும் அதன் சுருங்கச் சொல்லும் திறனில் அடங்கியுள்ளதென்பது, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2019) நூலில் ஆழமாக வற்புறுத்தப்படும் அம்சமாகும். அவர் வார்த்தைகளை அடியளவுப்படி எடுத்தாலுமே 3-6 அடிகளையுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அடுத்ததாக நாலடிச் சீறெல்;லையையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டதாய் குறுகத் தறித்த குறளாக விளங்குகின்றன குறுந்தொகைத் தொகுப்பிலுள்ள பாண்பாட்டுக்கள். அத் தொகுப்பில் பெருந்தேவனாரின்; கடவுள் வாழ்த்து உட்பட   401 பாக்கள் உள்ளன. இத் தொகை நூல் அரசன் பூரிக்கோ என்பான் காலத்தில் புலவர் பூரிக்கோவால் தொகுக்கப்பட்டது என்பர். இதன் 381   பாக்களுக்கு பேராசிரியர் உரையெழுதினாரென்றும், மீதி 20 பாக்களுக்கு நச்சிரினார்க்கினியர் உரை எழுதினாரென்றும் கூறப்படுகிறது. அவை இப்போது கிடைக்கப்பபெற்றில என்றும் அறிகிறோம். இதற்கான திணைக் குறிப்பு உரைக் குறிப்புக்கள் உட்பட்ட முதல் பதிப்பினை 1915இல் திருக்கண்ணபுரத் தலத்தான் தி

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி

  தேவகாந்தனின் ‘ காற்று மரங்களை அசைக்கின்றது ’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் -     ஈழக்கவி “ப டைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும், பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும் இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும் இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும், வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.” -     காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211   இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, Youtube ( www.youtube.com/watch?v=LHovj0cb_GY ) இல் “ஆறு சிறுகதைகள் ஒரு பகு