Posts

Showing posts from May, 2018

ஈழவர் கதை

ஈழவர் கதை (ஈழவர் என்பது இங்கே ஈழத் தமிழரையே சுட்டாய்க் குறிக்கிறது. ஈழத் தமிழர்பற்றி ஒரு வரலாறு சார்ந்த ஓர் அரங்க நிகழ்வுக்காக இலங்கையின் புராதன வரலாற்றின் மேலாக மீண்டும் ஒரு வாசிப்புப் பயணத்தை நிகழ்த்தியபோது எடுத்த குறிப்புகள் இவை. இதன் முக்கியமான நோக்கம் ஈழத் தமிழரின் பூர்வீகம் மற்றும் வரலாற்றின் தனித்துவத்தை இனங்காட்டுவதே ஆகும். இதை இன்னும் விரிவாக எழுதி நூலாக்கும் ஓர் எண்ணமும் என்னிடத்தில் இதை எழுதத் தொடங்கிய ஜுன் 2008 அளவில் இருந்திருந்தது. வேறு முயற்சிகளில் அதை முன்னெடுக்க வாய்ப்பு இதுவரை ஏற்படவில்லை. எதற்கும் ஒரு பதிவாக இருக்கட்டுமேன் என்பதற்காக என் வலைப்பூவில் இதை பதிவேற்றி வைக்கிறேன். இன்னுமொன்று, இக்குறிப்புகள் என் முடிவுகள் அல்ல.) 1.    பொதுவாகவே தமிழரின் தொன்மையை காலவரையறை செய்து நிறுவுவதற்கான அறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை அகப்படவில்லை. இலக்கியத்திலுள்ள சில தரவுகள் மூலமாகவும், அகழ்வாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட சில ஆதாரங்களின் அடிப்படையிலும்தான் இத் தொன்மை ஓரளவு கணிக்கப்பெற்றிருக்கிறது. 2.    இலக்கியத் தரவுகளின்படி பண்டைய தமிழகத்தில் இருந்ததாகக் கருதப்பட