Posts

Showing posts from July, 2020

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)

Sanjayan Selvamanickam 2நா · “கனவுச்சிறை” ****** தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஒன்றே போதும் அவரைத் தலையில்வைத்துக் கொண்டாட. இதுவரை வெளிவந்த ஈழப்போரட்டம் பற்றிய புனைவுகளில் இது உச்சம் என்றால் அது மிகையேயில்லை. One and Only! இந்த நாவல், இன்றுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை, ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு துன்பியல். ஈழப்போராட்டத்தையும், அது கருக்கொண்ட நாளில் இருந்து வளர்ந்து, பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து, அதிர்ந்து ஓய்ந்த காலம்வரை நாம் கடந்துகொண்ட வாழ்வையும், பிரளயங்களையும், வலிகளையும், இழப்புக்களையும், கனவுகளையும் இத்தனை ஆழமாக, அழகுற, சரித்திரச் சான்றுகளைப் பிசைந்து, உயிரூட்ட தேவகாந்தனால் மட்டும்தான் இதுவரை முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது 200 - 300 பக்க நாவல் அல்ல. ஆயிரத்திற்கு ஒரே ஒரு பக்கம் குறைவான ஈழப்போராட்டத்தின் சாட்சியம். அத்தனையும் இரத்தமும், எலும்பும் கலந்த சதை. குருதியின் வெடில் மூக்கில் ஒட்டிக்கொண்டு நாட்கணக்கில் மனதை அலைக்கழிக்கிறது. பல காதாபாத்திரங்களுடன் பெரு நட்புப் பூண்டிருக்கிறேன். பலரது நாட்குறிப்புகளை இரகசியமாக வாசித்து இந்த நாவலை எழுதினாரா

பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் 'மேகலை கதா'வுக்கான முன்னுரை

Image
முன்னுரை:   வாழ்க்கையின் ‘ விரிவடைந்த ' வடிவங்களாகிய காவியங்களை அடியொற்றி நாவல் புனைதல் , நாவல் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த ஒரு துணைவகைமையாகும் . இத் துறையில் முன் அனுபவ வீச்சோடு எழுதிவருபவர் தேவகாந்தன் . காவியங்களின் மூல ஊற்றுக்களாய் இருப்பவை , தொன்மங்கள்பற்றி விளக்க வந்த உளவியலாளர் கார்ள் யுங் , அவை ‘ கூட்டு நனவிலி ' யின் (Collective Unconscious) நீள் பதிவுகள் எனவும் , அந்த ஆழ்மனப் பதிவுகள் மனிதரின் கூட்டு உள்ளத்தோடு தொடர்ந்து நீட்சியுற்று வருவதாகவும் விளக்கினார் . தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் அந்தப் பதிவுகளுக்கு , தமக்குரிய உளப் பகுப்பியல் கண்ணோட்டத்தில் அவர் விளக்கம் கொடுத்தார் . பௌத்த மெய்யியல் தமிழகத்தில் நீட்சிகொண்டிருந்த காலத்தில் , மணிமேகலைத் தொன்மத்தைத் தெரிந்தெடுத்த சாத்தனார் , தமது காவியப் புனைவின் வழியாகத் தமிழகத்துச் சமூக வாழ்வைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் மறைநிலையையும் உட்பொதிந்துள்ளார் . ‘ பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம் ' என்ற கருத்தியல் வழியாகத் சமூகத்தில் ‘ ஊடு நிகழ்த்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை)

Image
வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியல் கொண்டவையெனச் சொல்லப்படுகிறது. யுத்தங்களும் தோல்விகளும் வெற்றிகளும் அதன் முழுஇடத்தையும் மூடிநிற்கின்றன. காதலும் காமமும் இவற்றின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்படுகின்றன. தோற்றவர் வடுக்களும், ஜெயித்தவர்   ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும், யுத்த ஆதிமூல காரணத்தின் தேடல் முற்றாக அதில் நிராகரிக்கப்படுகிறது அல்லது மாற்றி எழுதப்படுகிறது. நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே. ஆயினும் வென்றவர் தோற்றவர்கள் பார்வைகளுக்கும் மேலான ஒரு கருத்துநிலையில் நின்று, விடுபட்னவற்றையும் மாற்றி எழுதப்பட்டனவற்றையும் மாற்றீடு செய்ய முடியுமென இன்று   கண்டறியப்பட்டுள்ளது. இரு பகுதி மனிதரும் இதை இலேசுவில் கண்டுகொள்வதில்லை என்பது சோர்வு தருகிற விஷயமே. ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்களென்ற நம்பிக்கையோடு, இலங்கையின் சமீபத்திய நெடு யுத்தத்திற்கு சற்றொப்ப   பத்து வருஷங்களுக்கு முன்பா