Posts

Showing posts from November, 2021

பாரதியார் இன்கவித் திரட்டு

  வயதைச் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. சுமாராக எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கலாம். சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு முன்னாலிருந்த சரஸ்வதி  புத்தகசாலையிலே முதன்முதலாக நான் வாங்கிய பள்ளி சாரா நூல் ‘பாரதியார்இன் கவித்திரட்டு’. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தொகுத்தது. அப்போது அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அந்தப் பெயர் அல்லது அந்தப் பெயர்போல் ஒன்று எனக்குப் பரிச்சயமானதுபோல்தான் தோன்றியிருந்தது. பாரதியாரின் கவிகளின் திரட்டு என்ற பொருள்படும்படியாகவா, பாரதியாரின் இனிய கவிகளின் திரட்டு என்று பொருள்படும்படியாகவா நூலின் பெயர் இருந்ததென்று வெகுநாள் வரையில் எனக்குத் தெளிவில்லை. நூலின் முதலாம் பகுப்பில் ‘பாரத தேசம்’, ‘பாரத நாடு’ போன்ற தலைப்புகளின் கவிதைகள் என் கண்ணில் பட்டன. படித்தபோதும் அவை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. என் வீட்டுக்கு அயலிலுள்ள வீடுகளில். நேரு, சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மா காந்திபோன்றோரின் சட்டம் போட்ட படங்கள் சுவர்களில் தொங்கியதில் பாரதமென்பதை அந்நியமான தேசமாக என்னால் கணிக்கமுடியாது போனது. அதுபோலவே பள்ளியில் ஒவ்வொரு நாளும் கடவுள் வ