Posts

Showing posts from December, 2023

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில்

Image
     குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் -தேவகாந்தன்   சங்க இலக்கியத்தின் மிகப்பெரும் சிறப்பும் பலமும் அதன் சுருங்கச் சொல்லும் திறனில் அடங்கியுள்ளதென்பது, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2019) நூலில் ஆழமாக வற்புறுத்தப்படும் அம்சமாகும். அவர் வார்த்தைகளை அடியளவுப்படி எடுத்தாலுமே 3-6 அடிகளையுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அடுத்ததாக நாலடிச் சீறெல்;லையையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டதாய் குறுகத் தறித்த குறளாக விளங்குகின்றன குறுந்தொகைத் தொகுப்பிலுள்ள பாண்பாட்டுக்கள். அத் தொகுப்பில் பெருந்தேவனாரின்; கடவுள் வாழ்த்து உட்பட   401 பாக்கள் உள்ளன. இத் தொகை நூல் அரசன் பூரிக்கோ என்பான் காலத்தில் புலவர் பூரிக்கோவால் தொகுக்கப்பட்டது என்பர். இதன் 381   பாக்களுக்கு பேராசிரியர் உரையெழுதினாரென்றும், மீதி 20 பாக்களுக்கு நச்சிரினார்க்கினியர் உரை எழுதினாரென்றும் கூறப்படுகிறது. அவை இப்போது கிடைக்கப்பபெற்றில என்றும் அறிகிறோம். இதற்கான திணைக் குறிப்பு உரைக் குறிப்புக்கள் உட்பட்ட முதல் பதிப்பினை 1915இல் திருக்கண்ணபுரத் தலத்தான் தி