Posts

Showing posts from May, 2017

எனக்குப் பிடித்த சிறுகதைகள்:4

பாலன் பிறப்பு -முல்லை யேசுதாசன்- அருளர் கள்ளுக்கு போய்ட்டு வாறாரெண்டால், வளிச்சலில் நல்ல மீன் பட்டிருக்கும். அதில்லெயெண்டால் அண்டைக்கு நேவியடிச்சு, வளிச்சல் தொழிலாளர் ஆரும் வலையை வெட்டிப்போட்டு வர, இவர் தேடிப்போய் வலைகளைக்கொண்டு வந்திருப்பார். அதுவுமில்லையெண்டால் கடலில நல்ல சண்டை நடந்திருக்கவேணும். இயக்கம் நல்ல அடி குடுத்திருக்கவேணும். கடலைப்பற்றியோ அல்லது கடல் தொழிலைப்பற்றியோ ஏதேனும் கேக்கவேணும் எண்டால் அந்தாளைக் கேட்டா அச்சொட்டா பதில் சொல்லும். காலமை விடிய மூண்டு மூண்டரைக்கு எழும்பி, மண்டானுக்க நிண்டு சூடவலை, அறக்கொட்டியான் போகிற குல்லாக்களை இறக்கிக் குடுத்து… வளிச்சல் வள்ளங்கள் வந்தால் மீன் வெட்டிக் குடுத்து… கருவாடு போட்டு… இப்ப அதுதான் அவரின்ர தொழில். எப்படியும் நூறு ரூபா உழைச்சுப் போடுவார். சில நாள் கறிமீனோட காலம் போகும். அண்டைக்கு ஆரோடையும் கதைக்கமாட்டார். ‘ஏனப்பா, இண்டைக்கொண்டும் வாய்க்கேல்ல. ஏதேனும் பாரன்’ எண்டு மனிசியிட்டை சரணடைஞ்சு போடுவார். அன்றைக்கு மனிசி என்ன பேசினாலும் கேட்பார். ‘ஏனப்பா, உந்த குடிக்கிற காசுக்கு ஏதேனும் நல்ல சாப்பாட்டை சாப்பிடலாம்தானே’

புகையில் விழுந்த விருப்பம்

இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு ஆகிய இரண்டு அலைவரிசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐம்பதுகளின் இறுதியில் இயங்கியதென ஞாபகம். தேசிய ஒலிபரப்பு காலை எட்டு மணிக்கு முடிய வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து பத்து மணிவரை தொடர்ந்தது. மாலையில் மூன்று மணிக்கு வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடிய மேலே இரவு பத்தரை மணிவரை தேசிய ஒலிபரப்புத் தொடரும். தேசிய ஒலிபரப்பில் செய்திகளும், வர்த்தக ஒலிபரப்பில் நீங்கள் கேட்டவையிலிருந்து, இசையும் கதையும், திரைப் படங்களின் ஒலிச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகள் அனேகமாக எல்லார்க்கும் பிடித்தமான நிகழ்ச்சிகளாக இருந்தன. நான் கேட்டது வர்த்தக ஒலிபரப்பு. ரசித்தது சினிமாப் பாடல்கள். அந்த வயதில் எனது ரசனை வேறுவாக இருக்கவில்லை. வசதியாக பெரி றேடியோ பற்றியில் இயங்கிய வானொலி ஊரிலிருந்த மூன்று வீடுகளுள் எங்களதும் ஒன்று. பள்ளி நாட்களில் தாமதமானாலும் நான் வீடு வந்த நேரத்திலிருந்து ஆறுமணிவரை உச்சத் தொனியில் றேடியோ அலறுகிற ஒரு வீடாகவும் இருந்தது எங்களது. அக்காலத்தில் ஒலிபரப்பாகிய சினிமாப் பாடல்களைக்கூட என்னால் இன்றும் ஞாபகம்கொள்ள முடிகிறது. வ