Posts

Showing posts from July, 2018

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 6

ந.மயூரரூபனின் எழுத்துக்கள் சிக்கலும் தெளிவும் உடைய இரண்டு வகையினத்துள் அடைபடக் கூடியவை. அவரது பிற்கால புனைவுகளில் எழுத்தை அதன் ஆகக்கூடிய அர்த்தம் கொள்ளுமளவு இறுக்கிச்செல்லும் ஒரு முறைமையினை நான் அவதானித்தேன். இதுபோன்ற எழுத்துக்கள் நம்மிடையே எழுத பலரில்லை இன்று. இதனாலேயே இவரது வேறு நல்ல கதைகள் இத்தொகுப்பிலுள்ளபோதும், இதை இத்தொகுப்பின் சிறந்த கதையாகப் பதிவிடுகிறேன். என்னைப்பற்றிய பிற்குறிப்பு ந.மயூரரூபன் இதமான எண்ணங்களின் அரவணைப்பில் சுருண்டிருந்தது மனது. உடலது உணர்வுத் துளிகளில் ஒருவிதமான இன்பத் தேறல் துளிகளாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது. எனது ஒவ்வொரு அசைவும் மோகத்தின் மயக்கந்தரும் மகரந்தத்தின் வாசனையின் ஆக்கிரமிப்பினை ஆவலுடன்  எதிர்பார்த்து துடித்துக்கொண்டிருந்தது. அவளின் அன்பு பொலியும் அழகுமுகம் என்னருகே என்னையே பார்த்தபடி…       நான் உணர்வுகளில் சரணடைந்து என்னிலை மறந்து அவள் முகத்தினை நெருங்கினேன்.       ஒளிச் சிதறலுடன் வெடித்துச் சிதறியது காற்று.       என் கண்கள் இருளையே கண்டன. ஒளியைப் பார்க்க முனையும்போது சிதறிய உயிரின் துகள்களில் என் முகங்களே பலவாய்த் தெரிந்தன.