Posts

Showing posts from April, 2024

மேகலை கதாபற்றி...

  . தேவகாந்தனின் ‘மேகலை கதா’ கலைமுகம் 73இல் எஸ்.கே.விக்னேஸ்வரன் நன்பர் தேவகாந்தன் அவர்களை  நான் கொழும்பில் முதன்முதலாகச் சந்தித்தது 2004 அல்லது 2005இன் ஆரம்பகாலமாக இருக்க வேண்டும். அவரை நான் முதன்முதலாகக் கண்ட காட்சி என் கண்முன் இன்னமும் அப்படியே நிற்கிறது. நேர்த்தியாக எண்ணை வைத்து வகிடெடுத்துச் சீவிய தலை; மடிப்புக் குலையாமல்  மினுக்கப்பட்ட காற்சட்டை, முழுக்கைச் சேட்டு, முகத்தின் அளவுக்கேற்ற விதத்தில் அளவாகக் கத்தரிக்கப்பட்ட மீசையுடன் இணைந்த குறுந்தாடி என்பவற்றுடனான தோற்றப் பொலிவுடன் அவர் நின்றிருந்தார். கொழும்பு  கொட்டாஞ்சேனையில் இருந்த ஈக்குவாலிற்றி அச்சகத்தருகே, அந்த அச்சகத்தில் பணிபுரிந்த நண்பர் ரஞ்சகுமாரைச் சந்திக்கப் போன வேளையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. எனது முதற் பார்வையில் அவரது தோற்றம், அவர் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஒரு அதிகாரியாக இருக்கலாம் என்ற எண்ணத்தையே எனக்கு ஏற்படுத்தியது. நண்பர் றஞ்சகுமார் தான் அவரை எனக்கு ‘இவர்தான் தேவகாந்தன்’ என்று அறிமுகப்படுத்தினார். தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அத்தியாயம் அதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் வெளிவந்திருந்தது.என்பதால்