Posts

Showing posts from October, 2015

யாருடன் உரையாடி மனமாறல்கூடும்?

Image
எப்படியெல்லாம் தொடர்ந்தேர்ச்சியாக இது நடக்கிறது? வாழ்வின் மீதான தன் அதிகாரத்தை காலதேவன் இப்படித்தான் நிலைநிறுத்துகின்றானா? நேற்றுப்போல் இருக்கிறது, கவிஞர் திருமாவளவனின் மறைவு. இப்போது… வெ.சா! தாங்குவது சிரமமாகவே இருக்கிறது. வாழ்க்கையை… கழியும் நாட்களை… அவற்றின் கழியும் விதங்களை எண்ண மனது அவாவி நிலைநிற்க மறுத்துச் சலிக்கிறது. 2003இல் நான் தமிழகத்தைவிட்டு இலங்கை புறப்படும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் வெ.சா.வுக்கும் நிறைந்த தொடர்பு இருந்தது. அப்போது அவரது வீட் டுக்கு அண்மையில் மடிப்பாக்கத்தில்தான் நானும் குடியிருந்தேன். கூட்டங்களுக்கு கூடிச் செல்வதிலிருந்து ஓய்வுநேரங்களில் சந்தித்து உரையாற்றுவதுவரை வாரம் தவறாமல் நாங்கள் ஒரு தொடர்பில் இருந்திருந்தோம். நான் இலங்கையிலிருந்து கனடா சென்ற பிறகும் எங்கள் தொடர்பு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் இருந்துகொண்டேயிருந்தது. இறுதியாக முகநூலிலும்.  மடிப்பாக்கத்தில் இருந்த இறுதி நாட்களில் அவரது மனைவியின் பிரிவு அவரை வெகுவாக வாட்டியிருப்பினும், பெங்களூரு சென்றபிறகு அவர் திடமாகவே இருந்ததாகத்தான் தெரிந்தது. 2013

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 3

எனக்குப் பிடித்த சிறுகதைகள்:   3 (இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்) மழை ஏன் வந்தது? -நிரூபா ஒரு சின்ன அட்டைபோலத்தான் இருந்தது. சிறிது சிறிதாய் வளர்ந்து பெரிய ஒரு உருவமாய் மாறியது. பாம்பு! பெரிய ஒரு பாம்பு. மெதுவாய் அசைந்து அவளுக்குக் கிட்ட வந்தது. தலையை உயர்த்தி விரித்து பின்னர் அங்கும் இங்குமாக ஆட்டியது தீபாவிற்கு முன்.  ஆடாமல் அசையாமல் நின்றாள். அப்படியே எல்லாம் விறைத்துவிட்டதுபோல். இரத்தமே உடலில் உறைந்ததுபோல். ஆனால் … ஆனால் அந்த நாகம் விட்டதாக இல்லையே. மேலும் தனது கரிய உடலை அசைத்து அவளையே பார்த்தபடி நெருங்கியது. நாகம்! ‘ஐயோ அம்மா ஓடியாங்கோ.’ உரத்துக் கத்தினாள். அந்த நடுச்சாமத்தில் எல்லோரது நித்திரையையும் கலைப்பதாக. எத்தனை தடவைகள் கத்தினாளென்று அவளுக்கே தெரியாது. கண்களை இறுக்கி மூடியபடி கத்தினாள். ‘ஏன் ஒருத்தரும் எழும்பினமில்ல? ஒருத்தருக்கும் என்னைக் காப்பாத்த வேணுமெண்டு நினைப்பில்லையோ? ஐயோ! காப்பாத்துங்கோ.’ எங்கோ தொலைவில் தூங்கிக்கொண்டிருந்த சூரியனுக்குக்கூடக் கேட்டிருக்கும். சிலவேளை அதுகூட நடையைக்கட்டத் தொடங்கியிருக்கும். ஆனால் இந்த முண்டங்கள்
திருமாவளவன் காலமான செய்தியறிந்து மனது கனத்துக்கிடக்கிறது. இலக்கியத்துறையில் சக பயணி மட்டுமல்ல, ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து, கூர் கனடா தமிழ் கலை இலக்கிய ஆண்டுத் தொகுப்புகளில் ஆலோhசனைக் குழுவிலும் ஒருவராக இருந்த அவருடன் மிகநெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. சோகத்தின் இவ்வளவு கனதிக்கு இவையெல்லாமே காரணமாக முடியும். அவரது இழப்பில் வருந்தும் அவரது மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருடனும், உறவினர் நண்பர்களுடனும் என் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.