திருமாவளவன் காலமான செய்தியறிந்து மனது கனத்துக்கிடக்கிறது. இலக்கியத்துறையில் சக பயணி மட்டுமல்ல, ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து, கூர் கனடா தமிழ் கலை இலக்கிய ஆண்டுத் தொகுப்புகளில் ஆலோhசனைக் குழுவிலும் ஒருவராக இருந்த அவருடன் மிகநெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. சோகத்தின் இவ்வளவு கனதிக்கு இவையெல்லாமே காரணமாக முடியும். அவரது இழப்பில் வருந்தும் அவரது மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருடனும், உறவினர் நண்பர்களுடனும் என் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.
கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ
............................................................................. கடல் பயணங்கள் பற்றி தமிழில் விரிவாக எழுதப்பட்ட படைப்புக்கள் அரிதென்றே கூறிவிடலாம் . அருளரின் ' லங்காராணி ', 1977 இல் தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்ந்தபோது கொழும்பிலிருந்து தப்பி வந்த அகதிகளின் கடல்பயணத்தை விபரிக்கின்றது .. தேவகாந்தனின் ' கலாபன் கதை ' யின் கதைசொல்லி 1973 இல் கப்பலில் வேலை செய்யப்போவதில் தொடங்கி , இலங்கையில் இனப்படுகொலை காடையர்களால் மீண்டும் நடத்தப்படுகின்ற 1983 வரை நிகழ்கின்றது . கலாபன் மனோகரியைத் திருமணஞ் செய்து , முதல் குழந்தை பிறந்தவேளையில் குடும்ப நிலைமையின் காரணமாகக் கப்பலுக்கு வேலை செய்யப் போகின்றார் . ஒரு சாதாரண தொழிலாளியாகப் போகும் கலாபன் , அடுத்த பத்தாண்டுகளில் மூன்றாம் நிலை பொறியியலாளாகப் பதவி உயர்வுபெறும் வரை , அவரின் கப்பல் பயணங்களின் அனுபவத் தொகுப்பெனவும் இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம் . அகன்று விரித்திருக்கும் கடல் , பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை ஏற்றியிறக்குவதற்காய்ச் செல்லல் , குடும்...
Comments