Posts

Showing posts from September, 2019

பெண்களும் மனச்சிதைவும்

தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலில் பெண்களும் மனச்சிதைவும் -மைதிலி தயாநிதி – பெண், மனச்சிதைவு, ஆணாதிக்க சமூகம் எனுமிம் மூன்றுக்குமிடையிலான சிக்கலான தொடர்பினை காலச்சுவடு பதிப்பக வெளியீடான தேவகாந்தனின் கந்தில் பாவை (2016) சித்திரிக்கின்றது. நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் கதையினை, நான்கு பாகங்களில், 263 பக்கங்களில் பின்னோக்கி நகர்ந்து செல்லும் காலவொழுங்கு அடிப்படையில்   (2015 – 1880) நாவல் விரித்துச் செல்கின்றது. பாத்திரங்ககளின் மனச்சிதைவிற்கான மூல காரணத்தைத் தேடுவதால், கூறும் விடயத்திற்கேற்ப, நாவலின் கால ஒழுங்கமைவும் பின்னோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. அதாவது, நிகழ்காலத்தில் கடந்த கால நினைவுகளை மீட்டெழுப்பும் flash-back   உத்திக்குப் பதிலாகக் கதையின் நான்கு பாகங்களும் பின்னோக்கிய கால ஒழுங்கடிப்படையில்   (reverse chronological order) அமைந்துள்ளன.             எந்த ஆணாதிக்க கலாசாரத்திலம், அதன் உள்ளார்ந்த நம்பிக்கைகளுடன் வளர்தல் என்பது பெண்கள் மனநலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஷானா ஒல்வ்மன் கூறுகின்றார். அவ்வகையில், பெண்களின் மனச் சிதைவிற்கு பரம்பரை மட்டுமன்