கலித்தொகைக் பாடல்கள்... 12
ரசனைக் குறிப்பகள்: 12 அஞ்சியது ஆங்கே அணங்காகும் கேட்கும்போதே நடுக்கத்தையும் வெறுப்பையும் தந்த ‘நாம் அஞ்சுகிற எதுவோ அதுவே அணங்காகிற’தென்ற சொல் உண்மைதான் தோழி. சொல்கிறேன் கேள்: என் அழகைப் பாராட்டி நாளும் புதிது புதிதாக அவர் சொல்லும்போது, இதில் ஏதோ இருக்கிறதென அப்போதே நான் நினைத்தேன்தான். ஆனாலும் பெரிதாக அதை எடுக்கவில்லை. அதை உண்மையாக்கிக் கொள்ள சம்பவம் நடந்திருக்கிறது. வாசம் வீசும் படுக்கையில் படுத்துப் புணர்ந்த பின் என் ஆகத்தில் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது, ‘கூர்மையான தந்தங்களையுடைய யானையானது தாகம்மேலிட்டு கானலைக் கண்டு அலமந்தோடும் வெஞ்சுரம் கடந்துசென்று யான் பொருளீட்டி வரும்வரை, தன் முன்னிறைக் கைகொண்ட வளையல்கள் கழலாமல், பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு என் மனையை நிர்வகிக்கும் வலிமை இவள் கொண்டிருக்கிறாளா?’ என பிதற்றினார். அதுவே அவர் எண்ணமானால், அவரின்றி நான் வாழும் உளவலிமை எனக்கு இல்லையென்பது உண்மையானால், அவள் மார்பே கதியென்று கிடந்தவர், இப்போத...