Posts

துக்கத்தின் வடிவம்

துக்கத்தின் வடிவம் எனினும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கோ ஓர் மூலையில் வாழ்வு குறித்து . கொஞ்சம் அமைதிக்கும் கொஞ்சம் நிம்மதிக்கும் கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும் ஆசைகளின் பெருந்தவிப்பு . ஆனாலும் மீறி எழுகிறது மனவெளியில் பய நிழல்களின் கருமூட்டம் . முந்திய காலங்களில் மரணம் புதைந்திருந்த குழிகள் எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது . ஆனால் இப்போது ...? அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமுமே பயங்கரம் விளைக்கின்றன . எங்கே வெடித்துச் சிதறும் எங்கே அவலம் குலைந்தெழும் என்று தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது . மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல் மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது . இப்போதெல்லாம் தூக்கம் அறுந்த இரவுகளும் ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே காலத்தின் நகர்கிறது . அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமும...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 9

(சில வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீதரனின் ‘ஸ்ரீதரன் கதைகள்’ தொகுப்பை வாசித்ததிலிருந்து ‘சொர்க்கம்’ கதை நெஞ்சில் நின்றிருந்தது. சிறுகதையின் அமைப்பு கச்சிதமாய் அமைந்த கதையென்பதே அப்போது என் அபிப்பிராயமாக இருந்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள் பகுதிக்கு இதை எடுத்துக்கொண்டு ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இது சிறுகதை வடிவத்தையும் மீறி ஒரு குறுநாவலளவாய் வந்திருப்பதை உணர்ந்தேன். மேலே பதிவிற்காக தட்டச்சு செய்தபோதுதான் இது அந்தளவு விஸ்தீரணத்தையோ உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லையென்பது உணர்கையாகியது. இதை கூடியபட்சமாக ஒரு நெடுங்கதையாகவே எடுக்க இப்போது முடிந்திருக்கிறது. சிறுகதையின் விரிந்த வடிவமே நெடுங்கதையெனின் இந்த அலகுக்குள் இதனை அடக்குவதுதான் சரியாகவிருக்கும்.) சொர்க்கம் - ஸ்ரீதரன் - எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப்படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய புனிதத்திரித்துவம் நமது கவனம். எசக்கியும் செவுத்தியும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்பு வாகனமேறிய பெம்மான்கள். கரீம் ஒரு ஜாதி ஆள். இரவல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக்கிற நேரம் விறகு தள்ளுவான் அல்லது இளநீர் விற்ப...

நுண்பொருள்: அறம் - பொருள்- காமம் நூலின் என்னுரை

Image
என்னுரை திருக்குறளை  சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதை சங்க காலத்ததென எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப்   பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப்பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும்   மகிழச் செய்திருந்தேன். அப்போது வயது எனக்கு பதினேழுதான். அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர் உரையை முதன்மையாகவும், இளம்பூரணர், பேராசிரியர் உரைகளை உரைக் குறிப்புகளினூடாகவும் அறிய நேர்ந்திருந்தது. பின்னால் டாக்டர் மு.வரதராசன், நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா,  கலைஞர் மு...

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்

Image
என்னுரை வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியலின் விளைவுகள் எனப்படுகிறது . அதனாலேயே காதலும் காமமும் யுத்தங்களின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்பெற்று , அவற்றின் தோல்விகளாலும் வெற்றிகளாலும் அதன் முழுப் பரப்பும் மூடப்படுகின்றது . தோற்றவர் வடுக்களும் , வென்றவர்   ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும் , யுத்தத்தின் மூலகாரணம் அதில் முற்றாக   நிராகரிக்கப்படுகிறது . பலவேளைகளில் நிஜங்கள் திரித்தும் எழுதப்படுகின்றன . நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே . ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று   நிரூபணமாகியுள்ளது . தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப் போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம்தான் . ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள...