Posts

நுண்பொருள்: அறம் - பொருள்- காமம் நூலின் என்னுரை

Image
என்னுரை திருக்குறளை  சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதை சங்க காலத்ததென எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப்   பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப்பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும்   மகிழச் செய்திருந்தேன். அப்போது வயது எனக்கு பதினேழுதான். அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர் உரையை முதன்மையாகவும், இளம்பூரணர், பேராசிரியர் உரைகளை உரைக் குறிப்புகளினூடாகவும் அறிய நேர்ந்திருந்தது. பின்னால் டாக்டர் மு.வரதராசன், நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா,  கலைஞர் மு...

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்

Image
என்னுரை வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியலின் விளைவுகள் எனப்படுகிறது . அதனாலேயே காதலும் காமமும் யுத்தங்களின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்பெற்று , அவற்றின் தோல்விகளாலும் வெற்றிகளாலும் அதன் முழுப் பரப்பும் மூடப்படுகின்றது . தோற்றவர் வடுக்களும் , வென்றவர்   ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும் , யுத்தத்தின் மூலகாரணம் அதில் முற்றாக   நிராகரிக்கப்படுகிறது . பலவேளைகளில் நிஜங்கள் திரித்தும் எழுதப்படுகின்றன . நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே . ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று   நிரூபணமாகியுள்ளது . தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப் போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம்தான் . ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள...

நற்றிணையின் வெளியீடாக 2019 சென்னை புத்தக கண்காட்சியில்...

Image
என்னுரை என்னுடையவற்றில் ஆகக் குறைந்த பக்கங்களைக் கொண்ட இந்த 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' நாவலுக்கும் வழமையான பக்கங்களில் நீள என்னுரைக்கான விஷயங்கள் என்னிடத்தில் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் வேறு களமும் குணமும் பாத்திரங்களும்கொண்ட இந்நாவலுக்கான என்னுரையை குறுவடிவில் அமைத்துவிடுவதே என் தீர்மானம். குறுமுனிபோல் தன் பெருவிகாசம் அடக்கியே இந்நாவலும் தன்னுள் சுருங்கிச் சுருங்கி இந்த வடிவத்தை இறுதியாக எடுத்திருப்பதில் இந்த முடிவு பொருத்தமானதுதான். மூதினங்கள் பலவற்றின் ஐதீகங்களிலும் உள்ளோடியுள்ள ஆன்மீக ஒருமையே இந்நாவலின் ஆதாரமாய் நான் கருதுகிறேன். நைல் ஆரஸ் தைகிரிஸ் நதிதீர இனக் குழுமங்களினதைப் போலவே, நீர்வளமேயற்ற இலங்கை வடபகுதியிலுள்ள தமிழ்க் குமுகாயத்தின் ஐதீகங்களும் ரத்தமும் சோகமுமான நீள் வரலாறுகொண்ட கனடாவின் செந்நதிதீரத்தில் கொள்ளும் உறவு தமிழ் நாவல் பரப்பின் புதிய பிரதேசம். சிவப்பிரகாசமும் மங்களநாயகியும் வின்ஸியும் ஒரே சமூகத்தினதும்  கலாசாரத்தினதும் பிரதிநிதிகள்தான். ஆயினும் புத்துலகின் இறுகும் கண்ணிகளிடையே ஒரு புள்ளியில் எவ்வாறு அவர்கள் இணங்கியு...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் 8

( இதுபோன்ற மாயநிலைக் கதைகள் ஈழ தமிழிலக்கியத்தில் நிறைய இல்லை. இத்தகைய பின்நவீனத்துவ சாயலுடன் சிறுகதைகள் மொத்த தமிழ்ப்பரப்பிலும்கூட பெருவாரியாக இல்லையென்றே சொல்லவேண்டும். ச.ராகவன், திசேரா போன்றவர்கள் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். இப்போது ந.மயூரரூபனின் எழுத்துக்களில் இம்மாயாவாதத் தன்மைகளை அதிகமும் நான் கண்டுவருகிறேன். இத்தகைய கதைகள் சொற்களில் தங்கிநிற்பவை. தமக்கேற்ற சொல் இல்லையேல் நேர்த்தி நாகம்போல் இவற்றிலிருந்து நழுவிப் போய்விடுவதாய் இருக்கின்றது. ஓட்டமாவடி அறபாத்தின் இந்தக் கதை மிக நன்றாக வந்து அமைந்திருக்கிறது. 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி' என்கிற இவரது கதைத் தொகுப்பில் இதைவிட சிறந்ததாய் இரண்டொரு கதைகள் இருந்திருந்தாலும், இவ்வகைக் கதைக்காகவே இது என் தேர்வாகிறது.) ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன -ஓட்டமாவடி அறபாத்- இரவு விளக்கின் அனுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது.       கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணித்தன. கதவின் தாழ்ப்பாள் விலகிற்று. நான் சைக்கிளை உலத்திக்கொண்ட...

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

Image
2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த 'நட்ராஜ் மகராஜ்' தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது.       முதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே  இருந்தது.       என்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்த...