Posts

Showing posts from May, 2019

துக்கத்தின் வடிவம்

துக்கத்தின் வடிவம் எனினும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கோ ஓர் மூலையில் வாழ்வு குறித்து . கொஞ்சம் அமைதிக்கும் கொஞ்சம் நிம்மதிக்கும் கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும் ஆசைகளின் பெருந்தவிப்பு . ஆனாலும் மீறி எழுகிறது மனவெளியில் பய நிழல்களின் கருமூட்டம் . முந்திய காலங்களில் மரணம் புதைந்திருந்த குழிகள் எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது . ஆனால் இப்போது ...? அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமுமே பயங்கரம் விளைக்கின்றன . எங்கே வெடித்துச் சிதறும் எங்கே அவலம் குலைந்தெழும் என்று தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது . மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல் மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது . இப்போதெல்லாம் தூக்கம் அறுந்த இரவுகளும் ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே காலத்தின் நகர்கிறது . அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமும...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 9

(சில வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீதரனின் ‘ஸ்ரீதரன் கதைகள்’ தொகுப்பை வாசித்ததிலிருந்து ‘சொர்க்கம்’ கதை நெஞ்சில் நின்றிருந்தது. சிறுகதையின் அமைப்பு கச்சிதமாய் அமைந்த கதையென்பதே அப்போது என் அபிப்பிராயமாக இருந்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள் பகுதிக்கு இதை எடுத்துக்கொண்டு ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இது சிறுகதை வடிவத்தையும் மீறி ஒரு குறுநாவலளவாய் வந்திருப்பதை உணர்ந்தேன். மேலே பதிவிற்காக தட்டச்சு செய்தபோதுதான் இது அந்தளவு விஸ்தீரணத்தையோ உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லையென்பது உணர்கையாகியது. இதை கூடியபட்சமாக ஒரு நெடுங்கதையாகவே எடுக்க இப்போது முடிந்திருக்கிறது. சிறுகதையின் விரிந்த வடிவமே நெடுங்கதையெனின் இந்த அலகுக்குள் இதனை அடக்குவதுதான் சரியாகவிருக்கும்.) சொர்க்கம் - ஸ்ரீதரன் - எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப்படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய புனிதத்திரித்துவம் நமது கவனம். எசக்கியும் செவுத்தியும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்பு வாகனமேறிய பெம்மான்கள். கரீம் ஒரு ஜாதி ஆள். இரவல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக்கிற நேரம் விறகு தள்ளுவான் அல்லது இளநீர் விற்ப...