எனக்குப் பிடித்த சிறுகதைகள் 8
( இதுபோன்ற மாயநிலைக் கதைகள் ஈழ தமிழிலக்கியத்தில் நிறைய இல்லை. இத்தகைய பின்நவீனத்துவ சாயலுடன் சிறுகதைகள் மொத்த தமிழ்ப்பரப்பிலும்கூட பெருவாரியாக இல்லையென்றே சொல்லவேண்டும். ச.ராகவன், திசேரா போன்றவர்கள் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். இப்போது ந.மயூரரூபனின் எழுத்துக்களில் இம்மாயாவாதத் தன்மைகளை அதிகமும் நான் கண்டுவருகிறேன். இத்தகைய கதைகள் சொற்களில் தங்கிநிற்பவை. தமக்கேற்ற சொல் இல்லையேல் நேர்த்தி நாகம்போல் இவற்றிலிருந்து நழுவிப் போய்விடுவதாய் இருக்கின்றது. ஓட்டமாவடி அறபாத்தின் இந்தக் கதை மிக நன்றாக வந்து அமைந்திருக்கிறது. 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி' என்கிற இவரது கதைத் தொகுப்பில் இதைவிட சிறந்ததாய் இரண்டொரு கதைகள் இருந்திருந்தாலும், இவ்வகைக் கதைக்காகவே இது என் தேர்வாகிறது.) ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன -ஓட்டமாவடி அறபாத்- இரவு விளக்கின் அனுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது. கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணித்தன. கதவின் தாழ்ப்பாள் விலகிற்று. நான் சைக்கிளை உலத்திக்கொண்ட...