Posts

அஞ்சலிக்கான வெளி - தேவகாந்தன்

Image
  அண்மையில் கி.ரா.வின் மறைவின் உடனடிப் பின்னால், அவரது அந்திம கிரியைகளின் முன்னாலேயே, நண்பர் வண்ணநிலவன் வெளியிட்ட கி.ரா.மீதான அபிப்பிராயம் அதிர்ச்சியாகவிருந்தது. ஆனால் அதில் உண்மையும் இல்லாமலில்லை. வண்ணநிலவன் தெரிவித்த கருத்துக்களின் வரிக்கு வரியான அர்த்தத்திலன்றி, ஒரு பிரபலத்தின் மறைவின் முதல் தகவலிலேயே அந்தப் பிரபலமே தாங்கமுடியாத புகழாரங்களைக் குவித்துவிடுகிறதை பொது ஊடக வெளியில் நிறையவே காணக்கூடியதாகவிருப்பதைக் குறிப்பிடுகிறேன். அந்த ஒவ்வாமை சில அபிப்பிராயங்களை அசந்தர்ப்பமாய் வெளிப்படுத்திவிடுகின்றன என கொள்ளமுடியும். அண்மையில் பாடகர் எஸ்.பி.பி. காலமானபோதும், அதற்குச் சற்று முன்னர் கொரொனா காலத்திலேயே இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா மரணித்தபோதும்   தமிழிசைக் கடல் வற்றிவிட்டது, இலங்கைப் புனைவெழுத்தின் உச்சம் சரிந்துவிட்டது என்பதுமாதிரியாக பொது ஊடக வெளியில் வெளியிடப்பட்ட   அபிப்பிராயங்கள் கொஞ்சம் மனத்துக்கிசைவில்லாததாக   இருந்ததை நான் உணர்ந்தேன். அவ்வாறேதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவரை ஒரு கணம் எண்ணி பிரலாபப்படக்கூட ஒரு வெளியை பொது ஊடக வெளிகள் விட்டுவ...

எஸ்.போஸ் கவிதை

Image
  மன அலுப்பை நீக்க கவிதையேதாவது வாசிக்கலாமென எடுத்த நூல் ‘எஸ்.போஸ் படைப்புக’ளாக இருந்தது. அதிலுள்ள கவிதை இது. ஏதோவொரு இத் தருணப் பொருத்தம் கருதி அக் கவிதை இங்கே :   புத்தகம் மீதான எனது வாழ்வு கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க. யாரும் நம்பவில்லை தமது வாழ்க்கை புத்தகங்களோடுதான் தொடங்கியதென்பதை அவர்களே அப்படி நம்ப யாரையும் அனுமதிக்கவில்லை.   புத்தகங்களில் சோறு இல்லை புத்தகங்களில் துணி இல்லை அணிவதற்கு தங்க ஆபரணங்கள் தானும் இல்லை புத்தகங்களே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க.   நான் புத்தகங்களோடு வாழ்கிறேன் என்பதையும் புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதனையும் இதயம் சிதையும் துயரின் ஒலியை புத்தகங்கள் தின்னுகின்றன என்பதனையும் ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை என்னையம் அனுமதிக்கவில்லை.   புறாக்கள் வாழ்ந்த கூரைகளில் உதிர்ந்து கிடக்கின்றன வெண் சிறகுகள். -எஸ்.போஸ்  

எனக்குப் பிடித்த சிறுகதைகள்: 10 (நந்தினி சேவியரின் 'மேய்ப்பன்')

Image
 எனக்குப் பிடித்த சிறுகதைகள்.... 1970 இல் வெளிவந்த சிறுகதை இது. அறுபது எழுபதுகளில் இதுதான் எழுத்தின் முறைமையாக ஆகிக்கொண்டிருந்தது. இயற்பண்பு வாத்திலிருந்து யதார்த்த வாத நடை உருப்பெற்ற அக்காலத்தில் பல முற்போக்கு எழுத்தாளர்களும் இவ்வண்ணமே முயன்றார்கள். நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' மற்றும் 'அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' கூட எனக்குப் பிடிக்கும். அண்மையில் 'நந்தினி சேவியர்: படைப்புகள்' வாசித்தபோது இந்தக் கதையும் ஏதோவொரு விதத்தில் பிடித்திருந்தது. மேய்ப்பன் -         நந்தினி சேவியர்   “டாண்… டாண்! டாண்!” புனித தோமையார் ஆலய திருந்தாதி மணி இடையிடையே ஒலிக்;கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமைதான். ஆனால் இந்தக் கோவிலில் பூசை நடக்காது. பூசை நடைபெற்று இரு வருடங்களாகிவிட்டன. கோவிலில் பூசைமட்டும் நடைபெறுவதில்லையே தவிர, காலந்தப்பாது திருந்தாதிமணி மட்டும் ஒலிக்கும். இந்த ஒழுங்கின் காரணகர்த்தா சங்கிலித்தாம் அவர்கள். அவர் இல்லாவிட்டால்…? அவ்வூரின் கேந்திரப் பகுதியாக உள்ள கடற்கரைப் பிராந்தியத்தில் விரிந்து இருக்கும் கடற்கரையின் எதிர...

'கனவுச்சிறை" நாவல், மதிப்பீடு: நொயல் நடேசன்

  கனவுச்சிறை - தேவகாந்தன் Posted on   18/05/2016 by  noelnadesan இலக்கிய காலங்கள் , அந்தக்காலத்தின் சூழல் , சமூகம் , பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது . அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள் , மாதங்களாக இருக்கத் தேவையில்லை . இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939 ல போலந்திற்கும் 1941 ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது . ஆச்சரியமாக இருக்கிறதா ? மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக் , ரியலிசம் , நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது . அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும் . ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை . தற்பொழுது நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைப் பார்ப்போம் . ஈழத்தமிழ் இலக்கியத்தில் எனக்கு தெரிந்த காலம் 60-80 வரை முற்போக்கு காலம் . அக்காலத்தில் புரட்சி , சாதியம் என்பன பேசப்பட்டது . இரண்டு பிரிவுகளாக சிவப்பிலக்கியம் பேசியவர் ஒருவரை ஒருவர் திரிபுவாதிகள் என எழுதியதை சஞ்சிகைளில் வாசித்தேன் ...