Posts

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)

Sanjayan Selvamanickam 2நா · “கனவுச்சிறை” ****** தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஒன்றே போதும் அவரைத் தலையில்வைத்துக் கொண்டாட. இதுவரை வெளிவந்த ஈழப்போரட்டம் பற்றிய புனைவுகளில் இது உச்சம் என்றால் அது மிகையேயில்லை. One and Only! இந்த நாவல், இன்றுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை, ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு துன்பியல். ஈழப்போராட்டத்தையும், அது கருக்கொண்ட நாளில் இருந்து வளர்ந்து, பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து, அதிர்ந்து ஓய்ந்த காலம்வரை நாம் கடந்துகொண்ட வாழ்வையும், பிரளயங்களையும், வலிகளையும், இழப்புக்களையும், கனவுகளையும் இத்தனை ஆழமாக, அழகுற, சரித்திரச் சான்றுகளைப் பிசைந்து, உயிரூட்ட தேவகாந்தனால் மட்டும்தான் இதுவரை முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது 200 - 300 பக்க நாவல் அல்ல. ஆயிரத்திற்கு ஒரே ஒரு பக்கம் குறைவான ஈழப்போராட்டத்தின் சாட்சியம். அத்தனையும் இரத்தமும், எலும்பும் கலந்த சதை. குருதியின் வெடில் மூக்கில் ஒட்டிக்கொண்டு நாட்கணக்கில் மனதை அலைக்கழிக்கிறது. பல காதாபாத்திரங்களுடன் பெரு நட்புப் பூண்டிருக்கிறேன். பலரது நாட்குறிப்புகளை இரகசியமாக வாசித்து இந்த நாவலை எழுதினாரா...

பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் 'மேகலை கதா'வுக்கான முன்னுரை

Image
முன்னுரை:   வாழ்க்கையின் ‘ விரிவடைந்த ' வடிவங்களாகிய காவியங்களை அடியொற்றி நாவல் புனைதல் , நாவல் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த ஒரு துணைவகைமையாகும் . இத் துறையில் முன் அனுபவ வீச்சோடு எழுதிவருபவர் தேவகாந்தன் . காவியங்களின் மூல ஊற்றுக்களாய் இருப்பவை , தொன்மங்கள்பற்றி விளக்க வந்த உளவியலாளர் கார்ள் யுங் , அவை ‘ கூட்டு நனவிலி ' யின் (Collective Unconscious) நீள் பதிவுகள் எனவும் , அந்த ஆழ்மனப் பதிவுகள் மனிதரின் கூட்டு உள்ளத்தோடு தொடர்ந்து நீட்சியுற்று வருவதாகவும் விளக்கினார் . தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் அந்தப் பதிவுகளுக்கு , தமக்குரிய உளப் பகுப்பியல் கண்ணோட்டத்தில் அவர் விளக்கம் கொடுத்தார் . பௌத்த மெய்யியல் தமிழகத்தில் நீட்சிகொண்டிருந்த காலத்தில் , மணிமேகலைத் தொன்மத்தைத் தெரிந்தெடுத்த சாத்தனார் , தமது காவியப் புனைவின் வழியாகத் தமிழகத்துச் சமூக வாழ்வைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் மறைநிலையையும் உட்பொதிந்துள்ளார் . ‘ பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம் ' என்ற கருத்தியல் வழியாகத் சமூகத்தில் ‘ ஊடு நிகழ்த்...

யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை)

Image
வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியல் கொண்டவையெனச் சொல்லப்படுகிறது. யுத்தங்களும் தோல்விகளும் வெற்றிகளும் அதன் முழுஇடத்தையும் மூடிநிற்கின்றன. காதலும் காமமும் இவற்றின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்படுகின்றன. தோற்றவர் வடுக்களும், ஜெயித்தவர்   ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும், யுத்த ஆதிமூல காரணத்தின் தேடல் முற்றாக அதில் நிராகரிக்கப்படுகிறது அல்லது மாற்றி எழுதப்படுகிறது. நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே. ஆயினும் வென்றவர் தோற்றவர்கள் பார்வைகளுக்கும் மேலான ஒரு கருத்துநிலையில் நின்று, விடுபட்னவற்றையும் மாற்றி எழுதப்பட்டனவற்றையும் மாற்றீடு செய்ய முடியுமென இன்று   கண்டறியப்பட்டுள்ளது. இரு பகுதி மனிதரும் இதை இலேசுவில் கண்டுகொள்வதில்லை என்பது சோர்வு தருகிற விஷயமே. ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்களென்ற நம்பிக்கையோடு, இலங்கையின் சமீபத்திய நெடு யுத்தத்திற்கு சற்றொப்ப   பத்து வருஷங்...

கனடிய இலக்கியத்தின் வரைபடத்தில் கனடிய நாவல்கள் - தேவகாந்தன்

Image
தனது பல்வேறு நாட்டினங்களது இலக்கிய முயற்சிகளுக்கும் களமாக இருக்கிற ஒரு தேசம் கனடாவென்றே   தோன்றுகிறது. அதன் பல்லின, பல் கலாச்சார கொள்கைக் கூறுகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு மேலேதான் வலிவுபெறத் தொடங்கினவென்றாலும், அது சார்ந்த அதன் இன்றைய இலக்கிய வளம்   மிகுந்த கூர்மை பெற்றிருக்கிறது. கல்விமுறை சார் ஆங்கில இலக்கியப் பரிச்சயமுள்ள பலருக்கு அதன் இன்றைய நவீன இலக்கியத்தின் வீச்சு காணப்படாதது. ஆங்கில   இலக்கியமென்று பொதுப்படச் சொல்வதனாலேயே அதன் தனித்துவமும் காணாமல் போய்விடுகிறது. அதனால் கனடிய ஆங்கில இலக்கியமென்ற பதச் சேர்க்கை அதன் தனித்துவத்தை நிலைநிறுத்துவதாய் இருக்கமுடியும். கனடாவின் இலக்கிய வளத்தினுக்கு     ஆசியா ஆபிரிக்கா தென்னமெரிக்கா மற்றும் ஐரோப்பாவென பல கண்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்த மக்களிடையே தோன்றிய படைப்பாளிகளின் பங்களிப்புகள் கனடிய இலக்கியத்தின் இன்றைய உன்னதத்தின் பிரதம காரணங்களாக இருக்கின்றன. கனடிய ஆங்கில மொழி, கனடிய பிரெஞ்சு மொழி, கனடிய காலிக் (Canadian Gaelic) மொழியில் மட்டுமன்றி கனடிய பூர்வீக மக்களின் மொழிகளிலும் இன...

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

Image
மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்: மறுமலர்ச்சி இதழ்த் தொகுப்பினை முன்வைத்த நோக்குநிலை -தேவகாந்தன்- காலக் குழறுபடிகளால் இயங்கமுடியாத நிலையிலிருந்து மீண்டெழுந்த பின்னால் ‘லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனா’ சிறுகதையை முடித்ததும் நான் வாசிக்கத் தொடங்கிய நூல் ‘மறுமலர்ச்சி’ இதழ்த் தொகுப்பாகவிருந்தது. அத் தொகுப்பிலுள்ள செல்லத்துரை சுதர்சனது ‘ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சிக் காலம்: வரலாறும் மதிப்பீடும்’ என்ற ஆய்வுரையினடியாகத் தொடர்ந்த அவ்வாசிப்பு கிளர்த்திய சிந்திப்புக்களதும் எண்ணங்களதும் பதிவாக உருவானதே இவ்வுரைக் கட்டு.             ஓர் ஆய்வுக் கட்டுரையின் ஒழுங்கமைவும் தெளிவும் அடர்த்தியும் கொண்டிருந்தது அக்கட்டுரை. முதலில் இருப்பதனால் மட்டுமன்றி, தொகுப்பில் முதன்மையானது என்பதனாலும் அதுபற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிட நேர்ந்தது. மறுமலர்ச்சி’யின் சில இதழ்களே முன்னர் பார்வைக்குக் கிடைத்திருந்த நிலையில், அவற்றின் ஒட்டுமொத்தமான தொகுப்பின் வாசிப்பு மிக்க   பெறுமதியாக இருந்திருக்குமென்பதை எடுத்துக் கூறவேண்டியதில்...