Posts

செந்நதி இப்புனைவை இயல்பாய் நகர்த்திச்செல்கிறது -- கீத்தா சுகுமாரன்

தேவகாந்தனின் படைப்புக்களிலும் இலக்கியவிமர்சனத்திலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு . இன்றுவரை அவரது படைப்புகளுக்கு கிட்டவேண்டிய கவனம் அவருக்கு கிட்டவில்லை என்பதை இங்குள்ள அனைவருமே ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் . அவரது கனவுச்சிறை நாவலின் களமும் பரந்துபட்ட அதன் வெளியும் அவருடைய மொழியும் அவர் புனைவாக்கிய அனுபவங்களும் தீவிர வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவை . அதுமட்டுமல்ல விஷ்ணுபுரம் போல , மோகமுள் போல கனவுச்சிறை ஒரு காவியம் ( epic ), பேரிலக்கியம் ( magnum opus ) என்றே கருதுகிறேன் .  ' நதிமேல் தனித்தலையும் சிறுபுள் ' எனும் இப்புனைவுக்கு தேவகாந்தன் என்னை அறிமுகவுரை ஒன்றைக் கேட்டபோதே எனக்குப் புரிந்தது அது அவ்வளவு சுலபமான விடயம் அல்லவென்று - அதனால் மிகவும் தயங்கினேன் . அதற்கு காரணம் அறிமுகவுரை என்பது எப்படி அமைய வேண்டும் என்பதற்கான தெளிவு என்னிடம் இல்லை . அதனால் எனக்குத் தெரிந்த அளவில் இந்தப்புனைவுக்கான சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன் . அந்த வகையில் இக்குறிப்பு வெறும் ...