Posts

வாசிப்பின் சுகம்: 2

Image
அம்மாவின் ரகசியம் (குறுநாவல்) சுநேத்ரா கருணநாயக தமிழில்: எம்.ரிஷான்  ஷெரீப் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்;யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப்படைப்பு. இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இ...
Image
கடந்த தை, மாசி மாதங்களில் இந்தியாவில் நான் தங்கியிருந்த நாட்களில் கர்நாடகாவிலுள்ள சிமாக்கோவுக்கு  என் பேர்த்தியைக் காணச் சென்றிருந்தேன். என்னை அவளும் அவள் கணவரும் கோவாவுக்கு இரண்டு நாள் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் அழைத்துச் சென்றார்கள். சென்ற வழியில் கர்நாடகா கோவா நெடுஞ்சாலையில் நாம் பயண இளைப்பாறிய இடம் இது. தேவிமனை காட் என்கிற இந்த இடம் அற்புத அழகு வாய்ந்தது. மலை விளிம்புச் சாலையில் ஒரு தாழ்வான இடத்தில்  ஒரு கோவிலும் இருக்கிறது. கோவாவில் நாம் சென்றுபார்த்த நூற்றாண்டுப பழமையான தேவாலயம் இது.

பாரபாஸ்

-தேவகாந்தன்  பேர் லாகர்க்விஸ்ட் என்கிற சுவீடிய எழுத்தாளரின் ‘பாரபாஸ்’  நாவலை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். க.நா.சு.வின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்த நாவலை அது வெளிவந்த 1995ஆம் ஆண்டிலேயே வாசித்திருந்தும், இருபதாண்டுகளுக்கு பிறகான இப்போதைய வாசிப்பிலும் நாவல் தன் வீர்யம் குறையாத அழகுடன் விளங்குவதைக் காண முடிந்திருந்தது. வாசிப்பின் சுகம் அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் மொழி, நடை ஆகியன நவீன எழுத்தியலின் ஊடாகக்கூட குறையாதிருந்தமை முக்கியமானது. இந் நாவல் 1950இல் வெளிவந்திருக்கிறது அதன் மூலமொழியில். இதன் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பு 1955இல் ‘அன்புவழி’ என்ற பெயரில் அ.கி.ஜெயராமனால் வெளியிடப்பட்டதை தமிழ் பதிப்புரை தெரிவிக்கிறது. மூல நாவலுக்கு 1951இல் நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு  மூன்று நான்கு ஆண்டுகளிலேயே   இதன் கலாநேர்த்தி கண்டறியப்பட்டு  க.நா.சு.வினால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிகிறபோது வியக்காமலிருக்க முடியவில்லை. 1953இல் அரங்காக்கமாகவும், 1961இல் அன்ரனி குயின் நடிப்பில் சினிமாவாகவும் பாரபாஸ் அடைந்த விருத்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. அ.க...

லங்காபுரம்

Image
தேவகாந்தனின் "லங்காபுரம்" - முதல் வாசிப்பின் பகிர்தல்கள்.. பிரதீபன் சிவபாலன் தேவகாந்தன் அவர்களின் லங்காபுரம், விதி ஆகிய நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். வைகறை பத்திரிகையில் தொடராக வெளிவந்து இன்று அச்சுருப்பெற்று வெளியாகும் இந்த லங்காபுரம் நாவலுக்கு என்னை முதல் வாசகனாக இருக்கச் சொல்லிக் கேட்ட தேவகாந்தனின் அன்புக்கு முதலில் நன்றியை சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் மீதான முதல் தொடுகையை நானும் செய்திருக்கிறேன் என்பது என்னளவில் திகில் மிகுந்த பரவசமானது. எல்லா நூல் வெளியீட்டிலும் நான் நினைத்திருக்கிறேன் வெளியிடப்படும் அந்த நூலை முதன் முதலில் வாசிப்பவர்கள் என்ன விதமான மனநிலையை அடைவார்கள் என்று – இன்று அந்த முதல் மனநிலையின் சில நொடிகளைத் தன்னும் உங்களோடு பேசும் சந்தர்ப்பத்தை அச்சத்துடன் கூடிய பொறுப்பாகவே உணர்கிறேன். இதனையும் தாண்டி இந்த நூலுக்கு ஒரு விமர்சனத்தையோ மதிப்புரையையோ என்னால் முன் வைக்க முடியாது என்பதை வாக்குமூலமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “கதைகள் இன்பத்துக்காகவே புனையப்படுகின்றன. இன்பத்துக்கான புனைவுக...

தலையங்கம்: தேவகாந்தன்

கூர் தலையங்கம்: தேவகாந்தன் ‘அழிவின் கதறலையும் நெஞ்சில் நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நான் உங்களிடம் வருகிறேன்…’  ஏர்னஸ்ரோ சே குவேரா 1 புகுந்த ஒரு நாட்டின் மொழியினுள்ளும், பண்பாட்டினுள்ளும் ஓரினம் தன்னை விரும்பியே ஒப்புக்கொடுப்பதில்லை. காலவோட்டத்தில் மெல்ல மெல்லவாய் அது தானே நிகழ்கிறது. எனினும் அதன் வேரடியாக அதன் அசலான இனத்துவசு; கூறுகள் மெதுவான மாற்றங்களோடும் தம்மைத் தக்கவைத்துக்கொண்டு புதிய பரிமாணத்துக்காகக் காத்துநிற்கவே செய்யும். நாளைய புலம்பெயர் இலக்கியத்தின் வெளிப்பாடு கனடாவை, இங்கிலாந்தை, அவுஸ்திரேலியாவை, அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த மொழியினூடாக நிகழப்போகிறது என்பதில் ஐயப்பாடுகளுக்கு இடமில்லை. அது ஆங்கிலத்தின் வழியாகவேதான் இருக்கப்போகிறது. ஆனாலும் நாளைய தலைமுறையின் படைப்பு மொழியில் இந்த இனம்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு நிச்சயமாக இருக்கவே செய்யும். அவர் தம் சிந்தனையின் அசலான திசை அதனடியாகவேதான் அமையும். அதன் காரணமாய், அப் படைப்பு கனடா ஆங்கில இலக்கியமாக அடையாளப்படும் நேரத்திலும், அவர் தம் வேரடி சார்ந்த வெளிப்பாடுகளின் அம்சங்களைக் குறிக்கும் வண்ணம் கீழ்த்திசைக...