Posts

Showing posts from March, 2025
 (சென்ற ஆண்டின் இறுதியில் தாய்வீடு பதிப்பாக வெளிவந்த எனது 'சாம்பரில் திரண்ட சொற்கள்' என்ற நாவலின்  என்னுரை)   இது எனது பதின்மூன்றாவது நாவல். 2022 மேயிலிருந்து 2023 ஓகஸ்ற் வரை ‘தாய்வீடு” மாதாந்திரியில் வெளிவந்த ‘சாம்பரில் திரண்ட சொற்கள்’ என்ற  தொடர்கதையே அதே தலைப்பில் இப்போது நாவலாக நூலாக்கம் காண்கிறது. இது, தொடராக வந்த வடிவத்தில் பிரதி இப்போது இல்லையென்பதைத் தெரிவிக்குமென்றாலும், சற்று விளக்கமாக இதை நான் இங்கே சொல்வது அவசியம். பல்வேறு உலகமொழிகளிலும் நாவலின் தொடக்க வரலாறு பெரும்பாலும் தொடர்கதைகளினூடாகவே நடந்து வந்திருக்கிறது. அவற்றுள் பல சிறந்த நாவல்களும் தோற்றம்பெற்றன. ஆயினும், தொடராக வந்த வடிவத்துக்கும் நூலாக வந்த வடிவத்துக்கும் இடையிலான செம்மையாக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களேதும் வெளிப்படக் கிடைக்கவில்லை; அல்லது அதில் நாம் கூடிய கவனம் செலுத்தவில்லை. 2012 ஜனவரி – 2013 டிசம்பர் வரையான காலத்தில் ‘தாய்வீ’ட்டில் வெளிவந்த ‘நதி’யென்ற தலைப்பிலான எனது தொடரொன்று பின்னர் 2017 ஜனவரியில் ‘நதிமேல் தனித்தலையும் சிறுபுள்’ என்ற தலைப்பில் தமிழகத்தின் நற்றி...