Posts

Showing posts from June, 2023

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி

  தேவகாந்தனின் ‘ காற்று மரங்களை அசைக்கின்றது ’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் -     ஈழக்கவி “ப டைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும், பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும் இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும் இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும், வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.” -     காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211   இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, Youtube ( www.youtube.com/watch?v=LH...