
என் அன்பான வாசகர்களுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு உரைவடிவில் நிகழ்த்தும் நேர்ச் சந்திப்பு இது. devakanthanswriting.blogspot.com என்ற இந்த வலைப் பூவில் என் எழுத்துக்கள்பற்றிய பிறரின் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் வெளிவரும் என்பதோடு, இதுவரை எந்த இணையத்திலுமோ பத்திரிகை சஞ்சிகைகளிலுமோ வெளிவராத எனது எழுத்துக்களும் பதிவாகும் என்பதை வாசகர்கள் மனங்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். devakanthan.blogspot.com என்ற வலைப் பூவில் ஏற்கனவே வெளியான எழுத்துக்கள் பதிவாகும். அதிகமாக இந்த வலைப் பூவில் புதிய என் எழுத்துக்கள் வெளிவருவது மிகவும் குறைவாக உள்ளதை நான் காண்கிறேன். அதனால் ஜுன் 2020 இலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் வாசித்த நூல் மதிப்புரைகளையோ, என் நினைவு மீட்புக்களையோ, நான் கண்ட கேட்ட முக்கியமான நிகழ்வுகளையோ பதிவேற்ற திட்டமிட்டிருக்கிறே ன். வழமைபோல் என் எழுத்துக்கள் சார்ந்த உங்கள் பின்னூட்டங்களைப் பதிவிட அன்போடு வேண்டுகிறேன். ஜுன் 2020 இன் முதல் ஞாயிற்றுக் கிழமை சந்திப்போம். நன்றி.