போரின் உபவிளைவுகள்
போரின் உபவிளைவுகள் சிலவேளைகளில் சரித்திரத்தில் உதிர்க்கப்பட முடியாதன. -தேவகாந்தன் 2015 மாசி இருபத்தெட்டாம் நாள் இலங்கையிலிருந்து கனடா வந்து சேர்ந்தபொழுது, என் நீண்டகாலக் கனவான ‘கனவுச் சிறை’யின் வெளியீடு தமிழ்நாட்டில் தை 3ம் திகதியே நடந்திருந்ததில் அதுவரை, சுமார் மூன்று ஆண்டுகளாகவிருந்த மனவிறுக்கம் தளர்ந்து மனமீட்டம் பெற்றிருந்தேன். கடந்த மூன்றாண்டுகளாக என் மனம் முழுக்க நிறைந்து உணர்வுகளாய்க் குவித்திருந்த அடுத்த நாவலுக்கான வரிகள் மனத்தில் தளும்பிக்கொண்டிருந்தன. இலங்கையில் நண்பன் கேதாரியுடன் நான் தங்கியிருந்த இடமும் கரவெட்டியாக இருந்தவகையில், நாவலின் இயக்கம் துல்லியமாய்த் தளவமைவுகொள்ள அது வெகு ஆதாரமாயும் அமைந்திருந்தது, என் படைப்பின் தீவிரம்; படியாகாமல் அடங்க மறுத்திருந்த சமயம் அது. கொழும்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என என் பயண வழிகள் நாட்டின் அழிவைச் சொல்லிக்கொண்டிருந்தன. கண்ட முகங்கள் துயரத்தின் வலிகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. பேசிய மனங்கள் துக்கத்தின் எல்லைகளைக் காட்டிக்கொண்டிருந்தன. எனினும் அதுபற்றிய பதிவு முன்னேவந்து எழுதத் தம்மை நிறுத்தாமல் விட்டிருந்தன. ஏதோ ஒருவகையி...