'சகுனியின் சிரம்' தொகுப்பு குறித்த விமர்சனம்

சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் த.அகிலன் தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது . ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை . ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார் . மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம் , எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை . தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள் . நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால் , போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன . ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர் . இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள் , கட்சிச் சண்டைகள் , சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும் . தாங்கள் தவறவிட்ட தருணத்தை , மனி...