பெண்களும் மனச்சிதைவும்
தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலில் பெண்களும் மனச்சிதைவும் -மைதிலி தயாநிதி – பெண், மனச்சிதைவு, ஆணாதிக்க சமூகம் எனுமிம் மூன்றுக்குமிடையிலான சிக்கலான தொடர்பினை காலச்சுவடு பதிப்பக வெளியீடான தேவகாந்தனின் கந்தில் பாவை (2016) சித்திரிக்கின்றது. நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் கதையினை, நான்கு பாகங்களில், 263 பக்கங்களில் பின்னோக்கி நகர்ந்து செல்லும் காலவொழுங்கு அடிப்படையில் (2015 – 1880) நாவல் விரித்துச் செல்கின்றது. பாத்திரங்ககளின் மனச்சிதைவிற்கான மூல காரணத்தைத் தேடுவதால், கூறும் விடயத்திற்கேற்ப, நாவலின் கால ஒழுங்கமைவும் பின்னோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. அதாவது, நிகழ்காலத்தில் கடந்த கால நினைவுகளை மீட்டெழுப்பும் flash-back உத்திக்குப் பதிலாகக் கதையின் நான்கு பாகங்களும் பின்னோக்கிய கால ஒழுங்கடிப்படையில் (reverse chronological order) அமைந்துள்ளன. எந்த ஆணாதிக்க கலாசாரத்திலம், அதன் உள்ளார்ந்த நம்பிக்கைகளுடன் வளர்தல் என்பது பெண்கள் மனநலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஷானா ஒல்வ்மன்...