
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையிலிருந்து திரும்பியதும் புதியதொரு அவதாரம் எடுக்க நிர்ப்பந்தமாகிவிட்டது. இரண்டு தினங்களில் கனடாவிலிருந்து இந்தியாவுக்குப் போய்ச் சேரவேண்டிய தூரத்தை, தை 17இல் தொடங்கி தை 17லேயே பயணித்து வந்து சேர்ந்தேன். விஷயமென்னவென்றால் வந்தபோது இரவு 10 மணிக்கு மேலிருந்தது. செய்ய எதுவுமிருக்கவில்லை. தூங்கினேன். எழும்பியபோது காலையாகவிருந்தது. ஆனாலும் அப்போதுதான் நாளுழைப்பு முடிந்து தூக்கம் வருவதுபோல் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது. தூங்கினேன். எழுந்தபோது இரவாகவிருக்க மறுபடியும் தூக்கம். முதுமை அடைய அடைய தூக்இகம்ப்போ குறையுமென்துகிறார்கள். தெரியவில்லை எனக்கு. அது கொடை. வரப்பிரசாதம். அலட்சியம் பண்ணக்கூடாது. இப்போது பிரச்னையில்லை. தூக்க நேரத்தைக் குறைத்துக் குறைத்து வந்து, இரவில்மட்டும் தூங்க பயின்றாகிவிட்டது. நல்லது. இப்படித்தான் கடந்த சில தினங்களும் நடந்தேறியது. இனி பஞ்சமில்லை நேரத்துக்கு. முடிந்தவரை வாசிக்கவும், எழுதவும் நேரம் ஒதுக்கியாகிவிட்டது. 000 தொண்டமானாற்றங்கரையில் நான். 2016 மார்கழி