எனக்குப் பிடித்த சிறுகதைகள் 5
(அண்மையில்தான் ந.வினோதரனின் 'தவிச்ச முயல்' சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு பொலிஸ் விசாரணையின் கேள்வி பதில்கள் ஒரு கதையாக விரிந்த சிறப்பு எப்போதும் மனத்திலிருந்துகொண்டிருந்தது. இந்தவகையான உத்தி மிகவும் பழையதென்றாலும், மிக நுட்பமான கேள்வி-பதிலை அமைத்ததின்மூலம் ஒரு கதையே பின்னணியில் ஓடிக்கொண்டிருக்குமளவிற்கு அற்புதமாயமைந்திருக்கிறது கதை.) வேதாளத்திற்கு அளித்த வாக்குமூலம் ந.வினோதரன் “பெயரென்ன?” “அன்பழகன்.” “முழுப்பெயரைச் சொல்லு.” “அண்ணாமலை அன்பழகன்.” “ஊரு?” “யாழ்ப்பாணம்.” “யாழ்ப்பாணம் எங்கு?” “சாவகச்சேரி.” “சாவகச்சேரி அற்றஸ் சொல்லு.” நாச்சிமார் கோயில் வீதி, கல்வயல், சாவகச்சேரி.” “டேற் ஆவ் பேர்த்?” “22-09-1984.” “வயசு?” “இருபத்தஞ்சு.” “ஐ.சி.நம்பர்?” “841363140.” “பிறந்தது?” “பளை ஆஸ்பத்திரி.” “யவ்னாவில கொஸ்பிடல் இல்லையா?” “சாவகச்சேரியிலும் இருக்குது. ஆனால் அம்மம்மா வீடு பக்கத்தில எண்டதாலயாம்.” “அப்பாட முழுப் பெயர்?” “வல்லிபுரநாதர், கதிர்காமர், அண்ணாமலை.” “அப்பா என்ன வேலை?” “ஊரில வயல் இருந்தது. இப்ப வேலையில்லை.” “எத்தனை ...