
கடந்த தை, மாசி மாதங்களில் இந்தியாவில் நான் தங்கியிருந்த நாட்களில் கர்நாடகாவிலுள்ள சிமாக்கோவுக்கு என் பேர்த்தியைக் காணச் சென்றிருந்தேன். என்னை அவளும் அவள் கணவரும் கோவாவுக்கு இரண்டு நாள் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் அழைத்துச் சென்றார்கள். சென்ற வழியில் கர்நாடகா கோவா நெடுஞ்சாலையில் நாம் பயண இளைப்பாறிய இடம் இது. தேவிமனை காட் என்கிற இந்த இடம் அற்புத அழகு வாய்ந்தது. மலை விளிம்புச் சாலையில் ஒரு தாழ்வான இடத்தில் ஒரு கோவிலும் இருக்கிறது. கோவாவில் நாம் சென்றுபார்த்த நூற்றாண்டுப பழமையான தேவாலயம் இது.