கனவுச் சிறையும்,காலத்தின் திறப்பும்

 

24 டிசம்பர், 2014, முற்பகல் 9:18

 

இதோ ஒரு மனிதர் ஆரவாரங்களற்று நடந்து வருகிறார். சுடச்சுடச் சுண்டல் ,சுண்டலென்று கூவி வரும்  ஒரு வண்டிக்காரன் போலவோ,  கடலின் ஈரம் காயாத காலோடு 'உடன் மீன்' விற்கவரும் ஒரு வியாபாரியைப் போலவோ இவரைக் கண்டுவிடாதீர்கள். அந்த மக்களின் உணர்வுகளையும் சேர்த்து 'கனவுச் சிறைக்குள்' காலத்தைச் சுமந்து வரும் ஈழத்துக் கலைஞனிவர். வரலாற்றுக் கடமையாய் எழுத்தை உணர்ந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இத்தனை பாத்திரங்களைச் சுமந்து,இத்தனை நுண்ணுணர்வுகளைப் பேசி ஓயாமல் நடந்துவரும் எங்கள் அண்ணனை எழுத்தால் முத்தமிட்டு வாழ்த்துகின்றோம்.

 

ஆதரித்து நடக்கவும், விலகி நடக்கவும்கூடிய  கூட்டங்கள்,கும்பல்கள் எல்லாவற்றிற்கும் நடுவில் இருந்தபடியேதான் நடைப் பந்தையம் செய்யாத இந்த மனிதனை நாம் வாழ்த்துகின்றோம். கதைக்குள் அள்ளிக்கொட்டிய காலத்தை நீவி,நீவி விதையைக் கண்டுணர்வோம் வாசகரே

 

 

-        மெலிஞ்சி முத்தன்

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி