பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் 'மேகலை கதா'வுக்கான முன்னுரை

முன்னுரை:

 

வாழ்க்கையின்விரிவடைந்த' வடிவங்களாகிய காவியங்களை அடியொற்றி நாவல் புனைதல், நாவல் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த ஒரு துணைவகைமையாகும். இத் துறையில் முன் அனுபவ வீச்சோடு எழுதிவருபவர் தேவகாந்தன்.

காவியங்களின் மூல ஊற்றுக்களாய் இருப்பவை, தொன்மங்கள்பற்றி விளக்க வந்த உளவியலாளர் கார்ள் யுங், அவைகூட்டு நனவிலி'யின்(Collective Unconscious) நீள் பதிவுகள் எனவும், அந்த ஆழ்மனப் பதிவுகள் மனிதரின் கூட்டு உள்ளத்தோடு தொடர்ந்து நீட்சியுற்று வருவதாகவும் விளக்கினார். தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் அந்தப் பதிவுகளுக்கு, தமக்குரிய உளப் பகுப்பியல் கண்ணோட்டத்தில் அவர் விளக்கம் கொடுத்தார்.

பௌத்த மெய்யியல் தமிழகத்தில் நீட்சிகொண்டிருந்த காலத்தில், மணிமேகலைத் தொன்மத்தைத் தெரிந்தெடுத்த சாத்தனார், தமது காவியப் புனைவின் வழியாகத் தமிழகத்துச் சமூக வாழ்வைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் மறைநிலையையும் உட்பொதிந்துள்ளார். ‘பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்' என்ற கருத்தியல் வழியாகத் சமூகத்தில்ஊடு நிகழ்த்துகை' (Intervention) அவரால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்தமீள்வாசிப்பின் கலைப் புனைவாக நாவல் நீண்டு செல்கிறது.

"கதை சொல்லல்' (Story telling) "கதை இணக்குதல்' (Story making) ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம்கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு, வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது.

மீள் வாசிப்பு' என்பது ஆக்கற் செயற்பாடுமாகின்றது. மூலப் பனுவலாசிரியர் சொல்லவந்தவை மட்டுமன்றி சொல்லாதவற்றையும் மீள்வாசிப்பில் வெளிக்கிளம்பச் செய்தல் காவியம் தழுவிய நாவல்களில்ற் காணப்படும் சிறப்பியல்பு. அத்தகைய பதிவுமேகலை கதா'வின் பிறிதொரு பரிமாணம்.

மூலப் பனுவலாசிரியரின் ஆக்க மலர்ச்சி நீட்சியும், நாவலாசிரியரின் புனவு நீட்சியும் சங்கமிக்கும் இடங்களில் சமநிலையைப் பராமரித்துக் கொள்ளும் கலைவிசையோட்டம், நாவலில் நீண்டுசெல்கின்றது.

பதியிழந்த மணிபல்லவத் தீவோடு கதையை ஆரம்பித்தல்,பின்னைய நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தும் விரிவுக் (Extended) குறியீடாக அமைகிகின்றது. இன்னொரு நிலையில், சமகாலப் புலச் சிதறலைத் தொடர்புபடுத்தும் நினைவீட்டல் வாசிப்பாகவும் நீட்சிகொள்கின்றது.

தமிழகத்தில் நிகழ்ந்த வணிக வளர்ச்சியானது, நகரத்து வாழ்விடங்களில் தோற்றுவித்த வாழ்க்கைக் கோலமாற்றங்களும், மாற்றுப் புலக்காட்சித் தோற்றங்களும், நாவல் வாசிப்பபை ஊடறுக்கும் பதிவுகவுகளாவுள்ளன. அக்காலத்தைய சமூகச் சூழலை குறியீட்டுப் படுத்தும் வகைமாதிரியான பாத்திμங்களிடையே நிகழும் இடைவினைப் பகுப்பாய்வாகவும் (Interaction Analysis) நாவல் அளிக்கைசெய்யப்பட்டுள்ளது.

நாவலுக்கான செறிவேற்றம் பாத்திரங்களின் மனவெழுச்சிப்பின்னல்களோடு நீண்டு செல்கையில், பௌத்தம் முன்வைத்துள்ள சீலங்கள் மனவெழுச்சிகளை நெறிப்பாட்டுக்குள் கொண்டுவருதல், நாவலின் விரிவுச் செய்தியாகின்றது. "ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி' என்ற சாத்தனாரின் தவக் குரல் நாவலிலே துளையிட்டு நிற்கின்றது.

மூலப் பனுவலின் கருத்தியலோடு ஒன்றித்துச் செல்லலும், நாவலிற் பனுவலை, மேற்கோளிடலும் தொடர்புபடுத்தலும் கலைநிலையிலும், புலமை நிலையிலும் நேர்பட நிற்கும் பதிவுகளாகின்றன. வரலாற்று நாவல்களும், காவியங்களை அடியொற்றிய நாவல்களும் கறாரான வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப்படாவிடினும், தேவகாந்தன் டிது விடுபட்ட வரலாற்றுச் செய்திகளைக் கண்டறிவதற்கு அவற்றைப் புறவய நிலையில்ஆய்வாளர் தேடி நிற்பர். நாவல் எழுதுவோர் தொன்மையான இலக்கிய ஆதாரங்களையும், வாய்மொழி ஆதாரங்களையும், பொறுப்பு வாய்ந்த வரலாற்று ஆவணங்களையும் தழுவி நிற்பதால் அவர்கள் தரும் செய்திகளின் பெறுமானம் தகவுடையதாக இருக்கும். இந்நாவலில் இடம்பெறும் கயவாகு மன்னன்பற்றிய செய்தி, சமந்தகூடம், நாக வழிபாடு, மணிபல்லவம், பூம்புகார் தமிழ்ப் பௌத்த துறவிகள், பூம்புகார், கடலோடிகள், மணி வியாபாரிகள், முதலாம் விபரிப்புகள் μலாற்றுப் பதிவுகளோடு இணைந்த உசாவல்களாயிருத்தல், நாவலாசிரியரின் தொல் அடையாளத் தேடல்களை வெளிப்படுத்துகின்றன. ஆழ்ந்த வரலாற்று வாசிப்பு நாவலிலே சுவறிநிற்கின்றது.

ஆதி பௌத்தத்தின் தூய இயல்புகளை நாவலின் வீச்சுக்குள் கொண்டுவந்திருத்தல், புனைவுகளோடு ஒன்றித்துச் செல்லும் ஆவணப்படுத்தலின் நீட்சியைக் காட்டுகின்றது. கதைத்தவத்துக்கும், வரலாற்றுப் பதிவுகளுக்குமிடையே, சமநிலை இணக்கம் பராமரிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சமய நடைமுறைகளின் வளர்ச்சி, காலவோட்டத்தில் எதிர்கொண்ட நெகிழ்ச்சி நிலையை, ஆசிரியர் தன்கூற்றாகக் குறிப்பிட்டிருத்தல் (.62) நாவலோடு இணைந்த உறுநோக்கற் பதிவாக உள்ளது.

அத்தகைய நெகிழ்ச்சி நிலையிலிருந்தே மகாயானம், ஹீனயானம் முதலாம் வளர்ச்சிகள் பௌத்த நடைமுறையில் பினன்னர் தோற்றம் பெற்றமையைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

கதையோட்டத்தினூடே பௌத்தத்தின் ஆதார தத்துவங்களைச் சாத்தனார் வழங்கிய முறைமை, தேவகாந்தனால் நாவலில் வழிமொழியப் பெற்றதுடன், மீள வலியுத்தல் (Reinforcement ) விசையும் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவலின் சுவையைக் கருத்தியல் சுருக்கிவிடவில்லை. சமயத் தத்தவங்களோ, அரசியல் சித்தாந்தங்களோ கலை வடிவைஎடுக்கையில்பிரச்சாரம்' என்ற எதிர் நுழைவு நீட்சிகொள்ளாத சமநிலை பராமரிக்கப்படுகையில் கலைத்துவம் ஊறுபடாது மேலெழும். சாத்தனார் வழியில் அந்ந நுட்பம் தேவகாந்தனால் மேலும் பரவவிடப்பட்டுள்ளது.

சமயக் கருத்தாடல் நாவலின் சுவை நீட்சியோடு முட்டிமோதிக்கொள்ளாதவாறு புனைவு பின்னப்பட்டிருத்தலும், அதற்கு அனுசரணையான மொழியாடல் இடம் பெற்றிருத்தலும், குறித்து வைக்கப்படவேண்டியுள்ளன. வளமான மொழிச் செறிவு கதையோட்டத்துடன் கலந்துள்ளது. பௌத்த தத்துவத்தோடு இணைந்த இலக்கியங்கள் தமிழில் பரவலுற்றிருந்தாலும், மணிமேகலை அவற்றுள் மேலோங்கிய படைப்பாக கால நீட்சியில் இருந்துவருகிறது. காவியப் புனைவை. நாவல் புனைவாக மாற்றிய, மறுவாசிப்புடன் இணைந்த புத்தாக்கம்கதா'வாயிற்று.

மீளச் சொல்லல்' (Retold ) என்பது பனுவல்களை அறிமுகப்படுத்தும் இலக்கியச் செயற்பாடு. மூலப் பனுவலின் கருவை அடியொற்றிய நாவலாக்கம், ஆக்க மலர்ச்சியுடன் இணைந்த புதிய வடிவத்தைப் பெற்றுக்கொள்ளும்.

அத்தகைய எழுதுகையைமேகலை கதா' வெளிப்படுத்துகின்றது.

 

பேராசிரியர் சபா. ஜெயராசா


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி