Posts

Showing posts from December, 2025

கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் 3

  ரசனைக் குறிப்பு; 1   மரையா மரை கவர மாரி வறப்ப வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடை செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்கு தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந் துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் என்னீர் அறியாதீர்போல இவை கூறல்? நின்னீரல்ல, நெடுந்தகாய்! எம்மையும் அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு. துன்பம் துணையாக நாடின் அதவல்லது இன்பமும் உண்டோ எமக்கு? (பாலைக் கலி 5)   மாரி பொய்த்துப் போயிற்று.                                                                                       ...

கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு 2)

  முற்குறிப்பு 2   எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆதியனவற்றை ‘சங்கப் பனுவல்கள்’ எனக் குறிப்பிடுவதிலும், ‘பாண் பாட்டு’ என்று குறிப்பிடலே மிக்க பொருத்தமானது என்பார் பேராசிரியர் க.கைலாசபதி. அத்தனைக்கு அவை பாணர் பாடல்களாக – வாய்மொழி இலக்கிய பாரம்பரியம் கொண்டவையாக, இருந்தன. மேலும் வாய்மொழி இலக்கிய அடையாளங்களாக கீழ்நிலை மக்களின் அழைத்தல், உசாவல் பண்புகளை இப் பாண்பாட்டுக்கள் பொதுவில் கொண்டிருப்பனவாயினும், கலித்தொகையில் அவற்றை கூடிய அளவில் ஒருவரால் கண்டுகொள்ள முடியும். கலிப்பாட்டில் இயன்றிருப்பதனால்   கலித்தொகையென ஆகிய இத் தொகை நூல், நேர்நேர் உரையாடலும், நாடகத் தமிழ்ப் பண்பினையும் கொண்டதாய் இருப்பது மிக்க ரசனையினை வாசகர்க்கு அளிக்கின்றது. கலித்தொகையிலுள்ள முதற் பகுதியான பாலைத் திணை பிரிதல் ஒழுக்கத்தைப் பேசுகிறது. அது பொருள் வயிற் பிரிவு, போர் வயிற் பிரிவு, கல்வி வயிற் பிரிவென்ற காரணங்களில் நிகழுமாயினும், பாலைக் கலியில் அதிகமும் பொருள் வயிற் பிரிவே பேசப்படுகிறது. இதிலுள்ள முப்பத்தைந்து பாட்டுக்களும் தலைவன் பொருள் தேடும் முகத்தான் பிரிந்துசெல்ல நினைப்புழி, அவனை பல்வேறு கார...

கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு)

 முற்குறிப்பு 1 எட்டுத் தொகை நூல்களுள் 'கற்றறிந்தார் ஏற்றும் கலி'யென உரைக்கப்படுவது கலித்தொகையாகும்.  முல்லை குறிஞ்சி மருதம் என்ற ஒழுங்கில் சொல்லப்படும் மரபானது மீறப்பட்டு, பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என்ற திணை ஒழுங்கில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.  பாலைக் கலியை பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியை கபிலரும், மருதக் கலியை இளநாகனும், முல்லைக் கலியை நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர் என்பது பொது வழக்கு. ஆனால் புலவர் நல்லந்துவனாரே இவ்வைந்து திணைகளையும் பாடினாரென்பார் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை (1855). இதை கே.என்.சிவராஜபிள்ளையும் எஸ்.வையாபுரிப் பிள்ளையும் ஆதரிப்பர்.  இது எப்படியாயினும், கலித்தொகையின் ஒவ்வொரு திணையையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் பாடினர் என்பதும், அதில் நெய்தற் கலியைப் பாடிய நல்லந்துவனாரே இவ் ஐந்து திணைகளையும் தொகுத்தாரென்பதுமே அதிக வழக்காறாய் உள்ளது. இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதென்பதே தமிழறிஞர் பலரது கருத்தாக இருக்கிறது. கலித்தொகைப் பாடல்களின் கற்கை மிக இனிய அனுபவங்களைக் கொடுக்கக...