கலிங்கு-நாவல்

ஈழத்தைக் களமாகக்கொண்டு பயணிக்கும் நாவல் மிகுந்த உழைப்பைக் கோரிநின்றது. பலரும் கவனம் குவிக்காத அல்லது கவனத்தை மறைத்திருந்த திரைகளை விலக்கி அது காட்டும் திசைக்கோணம் நிச்சயமாக வாசகனை அதிரவைக்கும். இது அரசியல் பிரதியல்ல. எனினும் இது அரசியலைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. இதன் அர்த்தம், நிஜங்களின் இழைகளில் இது தனக்கான நியாயத்தை நெய்திருக்கிறது என்பதுதான். பாணனும், நிலாவும், சங்கவியும், நாகாத்தையும், பரஞ்சோதியும், குசுமவதியும், லோகீசனும், குணாளனுமென பெரும்பெரும் ஊழிகளை வாழ்ந்து கழித்தவர்களின் கதை இது. இவ்வாண்டு முடியும் முன்னர் பிரதி ரூபமெடுத்து வரும். சந்திப்போம்.
0

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி